என்ஆர்டி: போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர் பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்

nrdபல பாதுகாப்பு நிறுவனங்கள் போலி  அடையாள  அட்டை(ஐசி) வைத்துள்ள வெளிநாட்டவர்களை  வேலைக்கு  வைத்திருப்பதைத்  தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) அடையாளம்  கண்டிருக்கிறது.

எனவே,  போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர்,  வங்கிகளின் பாதுகாப்புப் பிரிவுகளில் வேலை செய்வது தமக்கு  ஆச்சரியமளிக்கவில்லை  என என்ஆர்டி விசாரணை, அமலாக்க இயக்குனர் வான் சக்கரியா வான் ஆவாங் கூறினார்.

“ஒரு பிலிப்பீனோவைக் கைது  செய்தோம். அவர்,ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் ஆயுதக் கிடக்குப் பொறுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்”,என வான் சக்கரியா தெரிவித்ததாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

சுபாங் ஜெயா எம்பேங்கில் ரிம450,000 கொள்ளையிடப்பட்டு அதன் அதிகாரிகளில் ஒருவர் கொல்லப்பட்டதன் தொடர்பில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரியைச் சுட்டுக்கொன்ற பாதுகாவலர் ஒரு வெளிநாட்டவர் என்பதும்  அவர் வைத்திருந்த  ஐசி  போலியானது என்பதும்  பின்னர்  கண்டுபிடிக்கப்பட்டது.