முகிரிஸ் பல்டி அடித்ததைத் தொடர்ந்து கெராக்கான் தேர்தல் பரப்புரைக்கு உதவும்

gerakan1சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில். கெராக்கான் இளைஞர் பகுதி  மதில்மேல் பூனை போல் இருக்கும் வாக்காளர்களைக் கவர்ந்திழுக்க கெடா மந்திரி புசாருக்கு உதவும்.

சுமார் 100 கெராக்கான் இளைஞர்கள், சுங்கை லிமாவ் சென்று,  அங்கு“எந்தத் தரப்பிற்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுக்காதிருக்கும்  வாக்காளர்களைக் கவரும்” நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கெராக்கான் இளைஞர்களின் புதிய தலைவர்  டான் கெக் லியாங் கூறினார்.

நேற்று மசீச-வின் இடைத் தேர்தல் நடவடிக்கை மையத்துக்கு வருகை மேற்கொண்ட மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர்.  மாநிலத்தில், சீனர்கள் உள்பட, எல்லாச் சமூகங்களிடமும் நியாயமாக நடந்துகொள்வதாக உறுதி கூறியதை அடுத்து டான் இவ்வாறு கூறினார்.

மேலும், முக்ரிஸ் மசீச-வின் குருன் சட்டமன்ற உறுப்பினரை ஆட்சிக்குழுவுக்கு நியமனம் செய்யப்போவதாகவும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு சரியான நேரத்தில் வந்துள்ளது என்ற டான், முக்ரிஸ் சீனர்-எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருப்பதாக எதிரணியினர் கட்டிவிட்ட கதைகளால்  கெடா சீனர் சமூகத்தில் அவருக்கு எதிராக “வெறுப்பு” வளர்ந்து விட்டிருந்தது என்றார்.

முக்ரிஸ் தம் அறிவிப்பால்,  நிலைமையைத் தெளிவுபடுத்தி இருப்பதால் இனி,  சுங்கை லிமாவில் சீனர்களின் ஆதரவு பிஎன் வேட்பாளருக்குத்தான் என்றாரவர்.