அம்னோவில் பண அரசியல் இன்னமும் பரவலாக இருக்கிறது என டாக்டர் மகாதிர் கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்த பிரதமர் துறை அமைச்சர் ஷஹிடான் காசிம், யாரோ சொன்னதைக் கேட்டு மகாதிர் அவ்வாறு சொல்லி இருக்கலாம் என்றார்.
“கையூட்டு கொடுப்பது கடினமான காரியம். 75,000 உறுப்பினர்களுக்குக் கையூட்டு கொடுக்க வேண்டியிருக்கும். யாரால் முடியும்?”, என ஷாஹிடான் வினவினார்.
நேற்று, புத்ரா ஜெயாவில், ஒரு நிகழ்வில் பேசிய மகாதிர், கட்சித் தேர்தலில் ஊழலை ஒழித்துவிட்டதாக அம்னோ கூறிக்கொண்டாலும் தமக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி இருந்தார்.
மிளகாய் கடித்தவனுக்கு தான் காரம் தெரியும் , மகாதிர் ஆட்சியில் மிளகாய் கடிக்கவில்லையா , கையூட்டு என்பது உனது ஆட்சியில்
தலை விரித்து ஆடவில்லையா , உன்னை பற்றி குடிமக்களுக்கு
தெரியாது என்று இன்னமும் நினைத்துக் கொண்டு நல்லவன் மாதிரி நாடகம் போடதே , எங்கள் இனம் இந்த நிலைக்கு வர காரணமான நீ இப்போது அம்னோவில் நேர்மையை எதிர்பார்க்காதே நைனா .
வந்த செய்தி என்று சொல்லடா
பாம்பின் கால் பாம்புதானே அறியும்!