தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் மலேசியாவுக்கு உயர்ந்த இடம்

businessஉலகப் பொருளகம், உலகின் 189 நாடுகளை ஆராய்ந்து தொழில்செய்வதற்கு ஏற்ற நாடுகள் என வரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கும்  பட்டியலில் மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களையும் முந்திக்கொண்டு 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன்வழி சிங்கப்பூர், ஹாங்காங், நியு சிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் மலேசியாவும் இடம்பெறுகிறது என அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் கூறினார்.

அரசாங்கம் 2015-க்குள் முதல் பத்து இடங்களில் ஒன்றைப் பெறுவதை இலக்காக வைத்திருந்தது என்றும் ஆனால், அதற்கு முன்பே அந்த இலக்கு அடையப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.