பெர்தாம் வெள்ளம்: பல ஆண்டுகளாகவே எச்சரிக்கப்பட்டு வந்தது

1floodகேமரன் மலையில் சுல்தான் அபு பக்கார் அணைக்கட்டை ஆராய்ந்து வந்துள்ள  ஆராய்ச்சியாளர்கள்  பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பது பற்றி எச்சரித்து வந்துள்ளனர்.

1997-இல், மலாயாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,  கேமரன் மலையில் காடுகள் பெருமளவு அழிக்கப்படுவது  அணைக்கட்டின் வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகளைச் சீர்குலைத்து  வருவதாக எச்சரித்தனர்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு யுனிவர்சிடி கெபாங்சாஆன் ,மலேசியா ஆய்வு ஒன்று  பலத்த மழை பெய்யுமானால் பெர்தாம் பள்ளத்தாக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரித்தது.

டிஎன்பி ஹட்ரோ சென். பெர்ஹாட்டின் ஆய்வு  ஒன்றும்  அதே போன்ற அபாய அறிவிப்பைச் செய்திருந்தது.

1 flood1காடுகளை  மீண்டும் உருவாக்கும் நடவடிக்கைகளாலும் விவசாயத்துக்காகவும் வீடமைப்புக்காகவும் தரையைச் சீர்படுத்தும் நடவடிக்கைகளாலும் மண் அரிப்பு பரவலாக நடந்துள்ளது என அந்த ஆய்வு  எச்சரித்தது.

மேம்பாட்டுப் பணிகளின் விளைவாக பெர்தாம் நீர்தேக்கத்தின் நீரைத் தேக்கி வைக்கும் திறன் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால் அப்பகுதியில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம்  இருக்கவே செய்கிறது.

எனவே,  அப்பகுதிவாழ்  மக்களின் பாதுகாப்புக்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. அபாயத்திலிருந்து தப்ப நினைத்தால் அப்பகுதியை விட்டு வெளியேறுவதே நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.