செம்பருத்தி இணையத்தள வாசகர்கள் அனைவரும் எங்களின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
சுடரின் நடனம் தொடரும் தீபங்களில்,
காணும் போதே களிப்புறும் உள்ளம்.
வானின் இருளில் வண்ணங்கள் தூவி,
மிளிரும் ஒளியில் சிதறும் பூக்கள்.
பட்டுத் துணியும் பரிசுப் பொருளும்,
கிடைத்திட இன்புறும் சின்னஞ் சிறார்கள்.
என்றும் இனிமையாய் இவர்களைப் போலே,
இருந்திடவாழ்த்துக்கள் இத்தீபாவளி நன்நாளில் !
( நன்றி: சதங்கா)
தீபாவளிக்கென சில நகைச்சுவை துணுக்குகள்.
மக்கள்: என்ன தலைவா தீபாவளிக்குள்ள பெர்மாத்தா வீட்டு பிரச்சனைய தீர்க்க ஒண்ணுமே எய்யாம எது கேட்டாலும் சிரிக்கிறீங்களே?
தலைவன்: “நான் சிரிச்சா தீபாவளி ஹோய்…”
என்ன இது. கூட்டணி வெடின்னு சொன்னீங்க. ஆனா, இந்தக் கட்டுல ஒரே ஒரு வெடிதான் வெடிக்குது.
என்ன செய்யறது. கூட்டணில அந்த ஒரு வெடிக்கு மட்டும்தான் எல்லா பவரும்.
சங்கு சக்கரம் மாதிரி வளைய வளைய வந்து மத்தாப்பு மாதிரி சிரிச்சவனுக்கு, நம்பிக்கையோடு ஓட்டு போட்டுயே, வீட்டுப் பிரச்சனை. என்ன ஆச்சு ?
வண்ண வண்ணமாய் – புஸ்வாணமாதான்!
அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. .. அதிகாரிங்க வந்து கேட்க மாட்டாங்களா ?
அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும் அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப் போறங்க
தீபாவளிக்கு அரசியல் தலைவர் கொடுத்த இனிப்பான செய்தி என்ன? சீனி விலையை ஏத்துனா, இல்லறத்தில இன்பம் பெருகுமாம். அப்படினா கேழ்வரகுல நெய்வடியுமே!
எதுக்கு சார் உங்க வீட்ல பட்டாசு வெடிக்க என்னைக் கூப்பிடறீங்க ?
நீங்க நிறைய பேரோட வாழ்க்கைக்கு வேட்டு வெச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனாலதான்.
தலைவர் புஸ்வாணம் கொளுத்தி குழந்தை மாதிரி சந்தோஷப்படறாரே.. .
வத்தி வெக்கற வேலையாச்சே.. அவருக்கு பிடிக்காம போகுமா ?
உங்களை பார்த்தா சிரிப்பா வருது
ஏன் ?
நீங்க சந்தோஷ மூட்ல இருக்கிறதா சொன்னீங்களே.. . அதான்!
எல்லா தமிழர்களும் தீபாவளி கொண்டாதுவதில்லை காரணம் இது தமிழர் பண்டிகையல்ல ..ஆரியரால் இறக்குமதி செயப்பட்டு தென் இந்திய தமிழர்களுக்கு மலிவு விலையில் விற்கப்பட ஒரு பண்டிகை .தை போங்கல்தான் தான் தமிழரின் பண்டிகை ! தீபாவளி கொண்ட்டாடுபவன் ஒரு மு… என்றுதான் சொல்ல வேண்டும் ! டேய் மட தமிழா உன் உரிமையை இழக்காதே ,உன் கலாசாரத்தை மறக்காதே!தீபாவளி தமிழர்கள் பண்டிகை கிடையாது !? வட நாட்டு பண்டிகை! சோகமான தீபாவளி ,இலங்கை தமிழர்களை
கொன்ற தீபாவளி தீபாவளிக்கு வாழ்த்து சொல்பவன் சுயநலவாதி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதவன் பொதுநலவாதி. 5 கிலோ அரிசிக்கு தமிழ் இன படுகொலையை கண்டுகொள்ளாமல் அரசியல் வாதியிடம் பிச்சை எடுக்கும் தமிழ் இனம் நோன்பு பெருநாள் முடிந்ததும் ஏறுமாம் PETROL விலை
இதை அறியாத தமிழ் இனம்!தீபாவளி நெருங்கியதும் சீனி விலை ஏறியதும் கண்ணுக்கு தெரியவில்லையாம் தமிழ் இனத்துக்கு !
தீபாவளி பண்டிகை கண்ணை மறைத்து விட்டதாம் !
ஒற்றுமை இல்லாத பரதேசி இனம் தமிழ் இனம் ,ஒற்றுமையாக இருந்தாலும் காலை வாரி விடுமாம் தமிழ் இனம் !
கத்தியை தீட்டும் தமிழ் இனம் ,
புத்தியை தீட்ட மறந்ததாம் !
வாய் பேச்சில் வீரனாம் தமிழ் இனம் ,
உரிமையை தட்டி கேட்க ரம்புத்தான் இல்லையாம் தமிழ் இனம் !
அறிவு தெளிவு இல்லாத தமிழனதுக்கு சொந்த நாடு இல்லையாம் !
தீபாவளி பண்டிகை, ஏங்கடா நமக்கெல்லாம் தீபாவளி பண்டிகை கேக்குதா ? HAPPY DEEPAAVALI TPUIII DEPAVALI !அன்றைக்கு மக்களை அட்டகாசம் செய்த நரகாசுரனை கொன்றதன் வலி தீபாவளி கொண்டாடினார்கள் ,ஆனால் இன்று எந்த நரகாசுரனை கொன்னார்கள் தீபாவளியை கொண்டாட ? உண்மையிலேயே சுத்த தமிழனா இருந்தால் இந்த தீபாவளியை கொண்டாட கூடாது ! அப்படி மீறி கொண்டாடினால் அவன் தமிழனே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்! இலங்கை தமிழ் ஈழத்தில் நம் தமிழர்களை கொன்று குவித்தானே வெ…பயல் ராஜபக்சா, கொல்லபட்டவர்கள் அனைவரும் நம் அக்கா தங்கை அண்ணன் தம்பிகள் !இப்படி இருக்கையில் நாம் தீபாவளி கொண்டாடலாமா ? சூடு சொரணை உள்ள தமிழன் தீபாவளியை கொண்டாட மாட்டான் .இறந்தவர்களுக்கு படையல் வைக்கிறார்கள்! எதற்கு படையில் வைக்கிறேங்க தெரியுமா ? அவர்கள் ஆத்மா சாந்தி அடியவேண்டும் என்றுதான், அப்படி இருந்தும் கோழியையும், அழகனா ஆட்டையும் கழுதை அறுத்து இறந்தவர்களுக்கு படையில் போடுறேங்களே நியாயமா? எப்படி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் லூசு பயல்கள, அதான் தமிழன் எங்கே சென்றாலும் செருப்படி வாங்குகிறான்! சாமி பெயரையும் இறந்தவர்களின் பெயரையும் சொல்லி இவன் வாய் ருசிக்காக கடவுள்களின் மேல் பலி போடுறான் ,,நாம் முட்டாளாக இருக்க வேண்டுமா இல்ல அறிவாளியாக இருக்க வேண்டுமா? இலங்கை %%%***** அதிபர் ராஜா பக்சாவை கொல்லும் வரையிலும் எந்த தமிழனும் தீபாளியை கொண்டாட கூடாது ,வீட்டில் சாமி மேடையில் கூட விளக்கை ஏற்ற கூடாது ! அப்படி மீறி செய்தால் அவன் சூத்த தமிழன் கிடையாது! சொந்த இனத்தையே குழி தோன்றி புதைக்கும் தமிழனாகத்தான் இருப்பான் ! சோறு சாப்பிடுறவன் தீபாவளி கொண்டாட மாட்டான் ! %%% சாப்பிடுரந்தான் தீபாவளி கொண்டாடுவான் ! THIS DEEPAAVALI NOT BELONGS TO TAMIL CULTURE !
தீபாவளி பலகாரங்களை விட, உங்களது இந்த தமாஷ் ;ருசிகரமாய்’ உள்ளது. செம்பருத்தி குடும்பத்தாருக்கு எங்களது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மோகன் சொல்வதில் உண்மை இருந்தாலும் நம்மவர்கள் காங்காலமாக இத்தீபாவளி திருநாளை கொண்டாடி வருகிறார்கள் ஏன் நமது பெட்றோர்களும் இதைத்தானே செய்து வந்தார்கள். இன்று நாம் இதை மறுத்து வெறுத்தாலும் உலகத் தமிழர்கள் கொண்டாடிதானே வருகிறார்கள். அதற்காவது நாம் வசை பாடுவதை விடுத்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு போவோமே..? தீபாவளி கொண்டாடும் செம்பருத்தி வாசக அன்பர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்..!
யாவருக்கும் தீபஒளி நல்வாழ்த்துக்கள். திரு மோகன் ரிச் அவர்களின் எழுத்து மிகவும் நன்று.ஐயா உங்கள் பெயர் பிராமணர் மற்றும் வெள்ளையர் பெயர் kalavai போல தெரிகிறதே!?
சீ … என்ன ஒரு கேவலம் , நம்ம வீட்டுல இளவு உளுந்துருக்கு எப்படி மகிழ்ச்சியா தீபாவளியை கொண்டாடுறாங்க ? ஈழத்துல நம் சொந்த உறவுகள் கொல்லப்பட்டது இன்னும் ஒரு தீர்வு பிறக்காமல் , எப்படி இப்படி எல்லாம் நம் தமிழர்கள் இழிவாக இருக்கிறார்கள் , இதைவிட கேடுகிட்ட செயல் என்னவென்றால் , தீபாவளி தமிழருக்கு தொடர்பு இல்லாத பெருநாளை கொண்டாடுவதாகும். மாறுங்கள் , நம் சிந்தனையை மாற்றுவோம் . உண்மையான தமிழனாக வாழுங்கள்
தீப வழிபாடு,ஜோதி ருபாமாக இருக்கும் ஜீவனை வழிபடுகிறே நேரம்,காலம் அனைத்தும் தீப வழிபாடு……..
திபாவளியை மலையாளிகள்,தெலுங்கர்கள்,கன்னடர்கள், வடநாட்டு இந்தியர்கள் கொண்டாடலாம்,கொண்டாடட்டும் ஆனால் ஈழத்தில் லட்சக்கணக்கில் நம் இனம் அழியும்போது நாம் தமிழர்கள் தீபாவளியை கொண்டாடலாமா ? தமிழர்களே சற்று சிந்தியுங்கள்.
இணையத்தில் படித்ததை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்!ஆரியப் பாப்பனர்கள் கட்டுவித்த கற்பனை கதையே தீபாவளி என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய தமிழர் மதம் என்ற நூலில் எழுதியுள்ளார்!தீபாவளி பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று,தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும்,குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டு பிறப்பு விழா[சீனர்கள் கொண்டாடும் வருட பிறப்பு போல்}தீபாவளிக்கும் தமிழர்க்கும்,தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை எனப் பேராசிரியர் சைவப் பெரியார் அ,கி,பரந்தாமனார் தான் எழுதிய மதுரை நாயக்க மன்னர்கள் வரலாறு என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்!
சோகம் தலைவர்களுக்கு தகுதி உண்டா? பல்லின மலேசியா பிரதமருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் !
தமிழ் ஈழம் மீதான ஆயுத போர் முடிவுக்கு வந்தாலும் மனிதம் தமிழ் இன தன் மானமும் பாதுக்காப்பும் இன்னும் உறுதி படுத்தப்படவில்லை. இலங்கையின் இன வெறிக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்கும் வரை சிங்கலதவன் கொட்டம் அடங்க போவதில்லை.
தென் ஆப்பிரிகாவில் கருப்பு இன மக்களுக்கு எதிரான அரசின் இன வெறியை எதிர்த்து சர்வ தேச நாடுகள் அணிதிரண்டு அந்நாட்டை தனிமை படுத்தி அடிபணிய வைத்தது போல், சோகம் மாநாடு அவசர தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்.இல்லையேல் சோகம் தலைவர்கள் உலக மக்கள் மத்தியில் அவமானப்படுவர்!
ஏன் சோகம் அமைப்பையும் ஐநா மனித உரிமை அமைப்பையும் மூடிவிட்டு போகலாம். மனித உரிமை மீறி சர்வதேச குற்றவியல் ஆயுத கொலை ஆட்டம் போட்ட ஸ்ரீ லங்கா அதிபர் ராஜ பக்சே குற்றவியல் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.
எந்த காரணம் தொட்டும் ராஜபக்சே சோகம் தலைவராக வர அனுமதிக்க கூடாது..ஸ்ரீலங்கா சோகம் உறுப்பினர் அந்தஸ்தை இழக்க வேண்டும்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் நாசிகளின் வதை முகாமிலிருந்து தப்பித்து வந்தவருமான பேராசிரியர் எலி வீசனின் குறிப்பிலிருந்து……”இலங்கை அரசால் ஈழ தமிழர்கள் வாக்குருமை இழந்தும் இன அழிப்புக்கும் தமிழ் மொழி அழிப்புக்கும் தம் சொந்த தாயகத்தில் அனாதைகளாக சாகும் நிலை மாற வேண்டும்”
உலக நாட்டு தலைவர்கள் தமிழர்கள் அழிக்கபட வேண்டும் என்ற கங்கனத்தில் தமிழ் ஈழததில் தம் முதற்கட்ட பல பரிச்சையை ராஜ பக்சே மூலம் ஆரம்பித்துள்ளனர்…இதற்கு அமெரிக்க ஒபமாவும் வாயடைத்து வெடிக்க வேடிக்கை பார்த்த கையாளாக தனமும் உலக தலைமைதத்துவ கேவலமாகும்.
1948ல் இருந்தே தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட இத்திட்டமிட்ட படுகொலைக்கு சிங்களவ புத்த அநீதி வர்க்கமே காரணம்.
ஆன்மீகமற்ற மிருக இன கொலையாளிகளின் இருக்கும் இலங்கையில் இன்று புத்தன் இல்லை.ஆன்மீகமிலை மனிதமும் இல்லை. பாவிகள் வாழும் ரத்த பூமியில் அங்கு ஏன் சோகம் ?
தமிழ் சமூகம் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.வடக்கே 140 இராணுவ தளங்கள்.3 லட்சம் ராணுவ பேய்கள்.தமிழர்கள் வாழ வழியின்றி முகாம்களில் அடிமைத்தன அடைப்பில் தினம் தினம் சாவும் கேவலம்.இந்தியாவும் உலக தலைவர்களும் உரிமை போராட்ட்டங்களை ஒடுக்க தமிழ் ஈழ மக்களின் ஒடுக்கு முறையை “ஒரு வழி முறை பாடமாக” உலக தலைவர்களுக்கு சொல்வதாக உள்ளதாம்? உலக சுய ஆதாயங்களுக்காக தமிழ் ஈழமும் தமிழர் நாடும் இந்த கொடூர அரசியல் சூழலில் சிக்க வைத்துள்ள அநீதியை உலக தமிழர்கள் உனர்துள்ளனர். மலேசிய தமிழர்களும் ஏமாளிகள் அல்ல.
அன்புள்ள மலேசிய பிரதமருக்கு….உங்கள் மலாய் இன இஸ்லாத்து சமய உணர்வு போல நாங்களும் மரியாதைமிக்க இனம்தான்.எங்கள் மொழிக்கும் உலக தமிழ் இனதுக்கும் 5000 ஆண்டுகள் உறவு உண்டு.எங்கள் உறவுகள் உலகம் முழுதும் உண்டு. தமிழ் ஈழத்திலும் எங்கள் உயிர்கள் தவிக்கின்றன !
தமிழர்களின் உரிமை போராட்டம் மில்லிடரி வலையில் இதுவரை 300,000 உயிகளை இழந்தும் எங்கள் சோகம் தீரவில்லை.மலேசிய தமிழர்களின் உணர்வுக்கு மதிபளித்து நீங்கள் சோகம் மாநாட்டை புறகணிக்க வேண்டும்.நமது நாடு ஸ்ரீ லங்கா உதவி இல்லாமல் வாழ முடியும் அனால் மனித கொலை நாட்டுக்கு ஆதருவும் உங்கள் சோகம் கலப்பும் மலேசிய தமிழர்களின் உணர்வுகளை பெரிதும் பாதிக்கும்.உலக இன வெறி கூடார கூட்ட்டங்களுக்கு கொடி தூக்க வேண்டாம்.மலேசிய மக்களின் தனி தன்மை தலைமை பிரதமர் உங்கள் பிதிப்பில்தான் உள்ளது. மனிதம் பாராட்டும் நமது இஸ்லாத்து பெருமையும் பேருண்மைகளும் உங்கள் சக்தியில் உணரப்படல் வேண்டும். “தமிழ் ஈழ மக்களுக்கு என்ன செய்யலாம்” என்ற புத்தகத்தை படியுங்கள். மனித நேய மரபுகளுக்கு மதிபளிக்கும் உங்கள் மனம் எங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதாது உலக தமிழர்களின் மனங்களில் நீங்களும் மலேசிய மக்களின் மனமும் வெளிப்பட வேண்டும். நீங்கள் சோகம் மாநாட்டுக்கு போக கூடாது என்பது எங்களின் தாழ்மையான கட்டளை.
மலேசியத தமிழர்களின் உணர்வுகளை உங்களுக்கு சொல்லித்தர உங்களிடம் சரியான ஆள் பலம்/ மன பலம்/ தைரியம் மிக்க ஆள் அதிகாரி இல்லாமையும் உங்கள் தவறுக்கு காரணமாக இருக்கிறது என்பதை நாங்கள் உணர்வோம்.
உருமாற்றம் என்பது அரசியல் அரசு அமைப்பில் மட்டும் போதாது மானிட மகத்துவம், மன நலம், மன உளவியல், உலக ஆன்மீக சமத்துவம் போன்றவையிலும் உருமாற்ற விவேகம் வேண்டும். அதுவே “மக்கள்” நாமத்தை சுமக்கும் நிம்மதியான தலைமைத்துவம்.
“சுய நலமே தனி மனிதனை இயக்கம் விசை.” இது தனி மனிதனுக்குக் பொருந்தும் முதலாளித்துவம்.இது ஆட்சி ஆளர்களுக்கு பொருந்தாது.நமது விடுதலை போராட்ட்டம் மனிதனின் மகத்துவம் செழித்து நிற்க வேண்டும்.சோகம் மாநாட்டில் பொது நலம் மனிதயம் நிற்கும் என்றால் நீங்கள் போய் வாருங்கள்.உப்பை தின்னவன் துப்பிதான் ஆகா வேண்டும்.நன்றி. உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம் மலேசியா.
தொடர்ச்சி மகாகவி பாரதியார் மனம் வெந்து,தமிழ் மக்கள் எருமைகளைப்போல் எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள்,ஈரத்திலேயே சமையல்,ஈரத்திலேயே உண்,உயர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான் என்றார்,மேலும் என் கருத்தை பகிர்ந்துக் கொள்கிறேன் தமிழர்களுக்கு சரியான வழிக்காட்டுதல் இல்லாமையே முழு மூலக்காரணம்,பொங்கல் புத்தாண்டா,சித்திரை புத்தாண்டா என்ற சர்ச்சை ஆண்டு தோறும் அரங்கேறுது,தமிழனுக்கு நாடு,ஆட்சி அதிகாரம் இல்லையே!ஆட்சி அதிகாரம் இல்லாத இனம் எதையும் எதிர் பார்க்க முடியாது!நேற்று பெய்த மழையில் இன்று புத்த காளான்,மலாய் இனம்,ஆட்சி அதிகாரம் இருப்பதால் தான் அல்லாஜ் வார்த்தையை மற்ற இனத்தவர்கள் சொல்ல நீதிமன்றம் மூலம் தடைவிதித்ததும், இல்லாமல்,விஸ்ணு பிரச்சனையையும் கிளப்பி சர்ச்சையை உருவாக்கியுள்ளது,வீட்டிலிருந்து ஒவ்வொரு தமிழ் பெண்களும் தீபாவளியை ஒழித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினால்,தீபாவளி விடுமுறையை பொங்கலுக்கு மாற்றி இரண்டு நாள் விடுமுறைக்கு போராடினால் நிச்சயம் மாற்றம் வரும்! அப்பன்,அம்மா,பாட்டன்,பாட்டி,முப்பாட்டன் முப்பாட்டி கொண்டாடிய தீபாவளியை நான் கொண்டாடாவிட்டாலும்.என்மனவியை கொண்டாட வேண்டாம் என்றால்,குடும்பத்தில் குழப்பம் வந்தே சேரும்! மோகன் ரிச் போன்றவர்கள் மற்றவர்கள் மனம் புண் படும் அளவுக்கு கருத்து பதிவேற்றி இருப்பது சரியா! மோகன் ரிச் ஆவேசமாக எழுதுவதை விட உங்கள் தலைமையில் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று ஒரு சங்கம்,அல்லது ஒரு இயக்கம் துவக்குங்கள்! பூனைக்கு யார் மணி கட்டுவது அது நிங்களாக இருந்தால் மிக்க நன்று!
திரு மோகன் ரிச் அவர்களுக்கு அன்பான,தாழ்மையான வேண்டுகோள்,ஒரு நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கும் இயக்கத்தை கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யும் இயக்கமாக மாற்றி விடவேண்டாம் என்று தலை தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்,வணக்கம்,நன்றி!
நாத்திகனே! தெரிந்ததை உளறுங்கள், தெரியாவிட்டால் பொத்திக்கொண்டு இருங்கள். மலையாளிகள் ஓணம் கொண்டாடுகிறார்கள். தெலுங்கர்கள், தீபாவளியை அடுத்து ஐந்து நாட்கள் கழித்து ‘சங்கராந்தி பண்டுகா’ வை கொண்டாடுவார்கள். பொங்கலுக்கு விடுமுறை வேண்டாம், தீபாவளிக்குத்தான் வேண்டும் என்று கேட்டவரே வேட்டிக் கட்டிய துன் சம்பந்தன தான். ஒரு நாள் போதாது, இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என சொல்கிறவர் ஐயப்ப பக்தன் பழநிவேல்தான். வாழ்வியலில்தான் தமிழனுக்கு ஒற்றுமையில்லை, கருத்துக்களிலும் தமிழர்களிடம் வேறுபாடுகள். நாய்வாலை நிமிர்த்தலாம். தமிழனை ஒற்றுமைப் படுத்த முடியாது.கவிஞர் கா.பெருமாள் சொல்வார்,” தமிழே தமிழனுக்கு உயிராம், அந்தத் தமிழனே தமிழுக்குத் தூக்குக் கயிராம்”. இந்த சந்தர்பத்தை விட்டால், ஆட்டுக்கறியை என்றுதான் ருசிப் பார்ப்பது. ஐந்துப் பத்துக்காகவும், அரிசி பருப்புக்காகவும் அலையும் நாதாரிக் கூட்டம் நாம். ஹரி ராயா புவாசவிற்கு, அன்றைய பிரதமர் அப்துல்ல படாவியின் வீட்டின் முன் இண்ட்ராப் வரிசைபிடித்து நின்றதே ஞாபகம் உள்ளதா? இந்துக்களை இழிவுப்படுத்திய ஒருவனின் கையை முத்தமிட்டோமே, sudah lupakah? தமிழனாய் பிறந்ததற்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என கடலுக்கு ஓடினால், சுனாமி விரட்டுகிறது. கிணறுகளை தேடினேன். ஒன்றையும் காணோம். மரத்தில் தூக்குப் போட்டுக் கொள்ளலாம் என கேமரன் மலைக்கு ஓடினால், அங்கு மரங்களே இல்லாமல் செய்துவிட்டது அரசாங்கம். எங்குதான் போவது?
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
மொழி மீதும் இனத்தின் மீதும் அணு அளவு அக்கறையில்லாத எப்படியும் வாழலாம் என்று தெரிந்தே விழித்துக்கொண்டே எங்கும் குதிக்க தயாராக உள்ளவர்களிடம் மோகன் ரிச் என்ன மறைமலை அடிகளோ ஆகி பரந்தாமனாரின் பருப்புகள் வேகா. சொந்த புத்தியோ கேட்பார் புத்தியோ இல்லாத நம்மவர்களிடம் என்னத்தை சொல்லி விளக்கப்போகிறோம்? தமிழர்களின் சரித்திரத்தை வாழ்வியல் பண்பாட்டின் கலை கலாசாரத்தை அறிந்திராத ஒரே இனம் நம் இனம்தான்!!! இந்துன்னு டமாரம் அடிப்பான் அம்மாவாசையில் வரும் தீபாவளிக்கு மாமிசம் சாப்பிடலாமா என்பதுகூட தெரியாது?? தீபாவளி வடநாட்டில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்தது கூட தெரியாது. இவர்களை பேசசொல்லிபாருங்கள். எல்லாம் தெரிந்த எல்லப்பனாக இருப்பார்கள். பரம்பொருளுக்கே வெளிச்சம்!?
மோகன் ரிச், சொல்ல வந்த எதையும் பக்குவமா சொன்னா அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகரும்மின்னு சொன்னாங்க இல்ல, அதுபோல கேட்டுக்கிட்டு வழிக்கு வருவாங்க. அதை விடுத்து ரொம்ப விரசமா சொன்னா, கருத்துக் குப்பைன்னு. கண்டுக்காம போயிடுவாங்க. தொடரும்.
இறந்தவர்களுக்காக விழா எடுப்பது தமிழர் மரபு அல்ல. தமிழர் பண்பாட்டிலும், சமயத்திலும் இதைக் காணாலாம். பிதிர் கடன் என்று சொல்லப்படும் இறந்தவர்களுக்காக செய்யப்படும் வழிபாட்டு முறையும் வேத மரபேயன்றி தமிழருடையது அல்ல. நமது முன்னோர்களை ஒரு சில மணித்துளிகள் நினைத்து அவர்கள்பால் கொண்டுள்ள அன்பினை நிலைநிறுத்த ஒரு நினைவு நாளை தேர்ந்தெடுத்து (அது அவர்கள் இறந்த தேதியாகவும் இருக்கலாம்) அவர்களுக்கு படையலிட்டு வணங்கிச் செல்வோம். மது, மாமிசம் என்று நர வழிப்பாடு செய்யும் நம் தீபாவளிக்கும், மாடு வெட்டும் தீபாவளிக்கும் என்ன வித்தியாசம்? அதை வேண்டாம் என்று சொல்லும் நாம், இதை வேண்டும் என்று சொல்லுவதில் என்ன நியாயம்? வேண்டாம், வேண்டவே வேண்டாம் இத்தகைய தீபாவளிப் பண்டிகை எம் இளைய தலைமுறையினருக்கு. மோகன் ரிச், இதுவே எமது வீட்டில் கடைசி சைவ தீபாவளி. அடுத்த வருடம் முதல் பொங்கலோ, பொங்கல்தான். மோகன் ரிச், யாம் உங்கள் கட்சியில் சேர்ந்து விட்டோம் என்று இப்பொழுதே ஸ்டாம்ப்பு ஒட்டி முத்திரை குத்தி உங்களிடம் என் முதல் மனுவை ஒப்படைத்துவிடுகின்றேன்!. மற்றவர்கள் எப்பொழுது உங்கள் மனுவை ஒப்படைக்கப் போகின்றீர்கள். விரைவாக செய்யுங்கள். அப்பொழுதான் நமது ஐயப்ப பக்தர் பொங்கலுக்கு பொது விடுமுறை கேட்பார். இல்லையென்றால், அடுத்த தீபாவளிக்கு இரண்டு நாள் லீவு வேண்டும் என்று நாஜி அண்ணனிடம் ஒற்றைக் காலில் நிற்பார். தமிழர்களே இதிலாவது உங்கள் ஒற்றுமையை நிலை நிறுத்துங்கள் பார்ப்போம்.
செம்பருத்தி குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எமது தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்.உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள். மேலே நண்பர் தேனீ குறிப்பிட்டுள்ளது போல் தமிழ்ப்புத்தாண்டுக்கு அரசு விடுமுறை வேண்டும்.அதற்காக தமிழ்நெஞ்சங்கள் கோரிக்கை எழுப்பி போராட வேண்டும் -இன்பச்சுடர்-