சுங்கை லிமாவில் இன்று வாக்களிப்பு

by elect12 நாள் பிஎன், பாஸ் பரப்புரைகளை இடைவிடாது கேட்டு வந்த சுங்கை லிமாவின் 27,222 வாக்காளர்கள் இன்று யாரை அத்தொகுதியின் பிரதிநிதியாக  சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பது என்பதைத் தீர்மானிப்பர். அத்தொகுதியின் உறுப்பினராக இருந்த முன்னாள் கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் செப்டம்பர் 26-இல் காலமானதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பிஎன்னின் அஹ்மட் சொஹாய்மி லாஸிமும் பாஸ் கட்சியின் முகம்மட் அசாம் சமட்டும் மோதுகின்றனர்.

13வது பொதுத் தேர்தலில், அசிசான், 2,774 வாக்குகள் பெரும்பானமையில் ஐந்தாவது தடவையாக அத்தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டிருந்தார்.

சுங்கை லிவாவ் வாக்காளர்களில் 25,323 பேர் அல்லது 93 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 1,842 பேர் சீனர்கள் (6.7 விழுக்காடு). இந்தியர்கள் 15 பேர் மட்டுமே.

17 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 90விழுக்காட்டினர் வாக்களிப்பர் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

TAGS: