அரசாங்கம், வருமான வரி வாரிய (LHDN) கட்டிடத்தில் பழுதுபார்க்கும் வேலைகள் செய்து முடிக்கப்பட்டதாகக் கூறினாலும் உண்மை நிலவரம் வேறு விதமாக உள்ளது.
கடந்த வியாழக்கிழமை, பாங்கியில் உள்ள LHDN தகவல் சேகரிப்புத் துறைக்குச் சென்ற செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் மழை பெய்த பின்னர் அக்கட்டிடத்தில் வெள்ளம் பெருகக் கண்டார்.
2012 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில், அங்கு வெள்ளப் பெருக்கைத் தடுக்க சுவர் எழுப்பப்பட்டதாக பொதுப் பணி அமைச்சு கூறியிருந்தது.
“கடந்த வியாழக்கிழமை பிடிக்கப்பட்ட இப்படங்கள் இன்னும் வெள்ளம் பெருகுவதைக் காண்பிக்கின்றன”, என ஒங் கூறினார். ஒங் இன்று அந்த இடத்துக்குச் செய்தியாளர்களை அழைத்துச் சென்று காண்பித்தார்.
வருமான வரி கட்டவில்லை என்றால் என்ன ஆகும் என்று இப்போது தெரிகிறதா! ஏதோ வெள்ளப் பெருக்கோடு போய்விட்டதே என்று மகிழ்ச்சி அடையுங்கள். இடி மின்னல் எல்லாம் கட்டடத்தின் உள்ளே சென்று தாக்கினால் , யார் கண்டார், கட்டடமே இடிந்து விழுந்தாலும் வீழலாம்! எல்லாம் ‘அவன்’ செயல்!