பிரதமரின் மறுப்பைச் சர்ச்சைக்குள்ளும் அம்பிகாமீது சாடல்

1 perkasa13 ஆவது பொதுத் தேர்தலில் 40,000 வங்காளதேசிகள் வாக்களித்ததாகக் கூறப்படுவதை பிரதமர் மறுப்பது கவனத்தைத் திசை திருப்பும் நாடகம் என்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா கூறியது “தவறு”.

ஏனென்றால், அது எதிரணியினர் கட்டிவிட்ட கதை என்று இரண்டு என்ஜிஓ-கள் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.

“இன்று எதிரணிப் பேச்சாளர் அம்பிகா, அரசாங்கத்தின்மீது பழி போட முயல்கிறார். இந்தப் பொய்யை அவிழ்த்துவிட்டது யார்? ஞாபக மறதி உள்ளவரா அம்பிகா?”, என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.

அவருக்கு ஆதரவாக வந்த ஜாரிங்கான் மலாயு மலேசியா தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா, பிரதமர் பற்றி அவதூறு பேசுவோருக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்  “பெரும்பான்மை” மலேசியர்கள் விரும்புவதாகக் கூறினார்.