கூட்டரசு நில மேம்பாட்டு வாரியம் (பெல்டா )லண்டனில் ஹோட்டல் வாங்கியதைத் தற்காத்துப் பேசிய அதன் தலைவர் இசா சமட், அதற்குக் கொடுக்கப்பட்ட விலை அதிகம் என்று சொல்லி டிஏபி மட்டுமே அதைக் குறை கூறுகிறது என்றார்.
தாபோங் ஹாஜி, தொழிலாளர் சேமநிதி வாரியம் போன்றவைகூட லண்டனில் சொத்து வாங்கி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“பெல்டா மலேசியாவில் எட்டு தங்குவிடுதிகளை வைத்துள்ளது”, என்றாரவர்.
அது நல்ல முதலீடுதான் என்று குறிப்பிட்ட அவர், அந்தத் லண்டன் தங்குவிடுதி 80-இலிருந்து 90 விழுக்காடு நிரம்பி விடுவதாகக் கூறினார்.
அது நல்ல முதலீடு என்பதில் எந்த ஐயமுமில்லை. தங்கும் விடுதிகள் 80-90 விழுக்காடு என்பது உண்மைதான். பிரச்சனையெல்லாம் – இது தானே உங்கள் கண்களை உறுத்தும். இலாபம் என்பதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காத சொல் ஆயிற்றே! இன்னும் ஓரிரு ஆண்டுகள் போனால் நட்டக் கணக்கை அல்லவா காட்டுவீர்கள். அதற்காக இப்போதே கண் கலங்குகிறோம்! இறைவா! இவர்களைக் காப்பாற்றும்!