சுங்கை லிமாவ்: பாஸ் கட்சியின் முகமட் அஸாம் சாமாட் வெற்றி பெற்றார்

Sg. Limau- PAS makes it -சுங்கை லீமாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பு முடிவுற்று, வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இரவு மணி 10.00 அளவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத் தேர்தலில் பிஎன்னின் அஹ்மட் சொகைமி லாஸி, 53, மற்றும் பாஸ்சின் முகமட் அஸாம் சாமாட், 37, ஆகிய இருவருக்கிடையிலான நேரடிப் போட்டியாக இருக்கிறது.

சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதி பாஸ்சின் கோட்டையாகக் கருதப்படுகிறது. காலஞ்சென்ற அஸிசான் அப்துல் ரசாக் இத்தொகுதியை ஐந்து தேர்தல்களில் தன்வசம் வைத்திருந்தார்.

இத்தொகுதியின் 27,222 வாக்காளர்களில் 85.5 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இரவு மணி 7.10: பாஸ்சின் நடவடிக்கை மையத்திலிருந்து கிடைத்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்:

பாஸ் – 8,276

பிஎன் – 7,506

செல்லாத வாக்குகள் – 61

இரவு மணி 7.45: பாஸ் தலைவர்களும் வேட்பாளர் முகமட் அஸாம் சாமாட்டும் தேர்தல் ஆணையத்தின் வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றனர். பாஸ் வெற்றி பெற்றுள்ளது இது அறிகுறி.

இரவு மணி 7.40: பாஸ் மற்றும் பிஎன் ஆகியவற்றிடமிருந்து கிடைத்தத் தகவல்படி பாஸ் 12,068 வாக்குகளையும் பிஎன் 10,985 வாக்குகளையும் பெற்றுள்ளன.

இரவு மணி 8.00: அமைதியாகக் காணப்பட்ட பாஸ் வேட்பாளர் முகமட் அஸாம் சாமாட் தமக்கு ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரையில் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

இரவு மணி 8.50: அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவு அறிவிப்பில் பாஸ் வேட்பாளர் முகமட் அஸாம் சாமாட் 12,096 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பிஎன் வேட்பாளர் அஹ்மட் சொகைமி லாஸி 10,985 வாக்குகளைப் பெற்றார். பாஸ் வேட்பாளருக்கு கிடைத்த பெரும்பான்மை வாக்குகள்1,084.