மாட் சாபு:: வாத்துகளும் மாடுகளும் வந்தன; ஆனால் பாஸ் வெற்றி பெற்றது

Sg. Limau- PAS makes it -சுங்கை லீமவ் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஸ் வேட்பாளர் முகமட் அஸ்சாம் சாமாட் எதிர்வரும் 18 ஆம் தேதி கெடா மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார்.

ஆயிரக்கணக்கான பாஸ் ஆதரவாளர்கள் தங்களுடைய புதிய சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து வாழ்த்துக் கூற டூலாங் கெச்சிலில் குழுமியிருந்தனர்.

அவர்களிடையே உரையாற்றிய கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு கட்சி இரு – மாநில மற்றும் மத்திய – அரசுகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது என்றார்.

“அவர்கள் அனைவரையும் அனைத்தையும் இங்கு கொண்டு வந்திருந்தனர்.PAS - Mat Sabu, Sg. Limau வாத்துகளும் மாடுகளும் கூட”, என்று அவர் கூறியதைக் கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் சிரித்தனர்.

பாஸ் அதன் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று சுங்கை லீமாவ் மக்கள் அரசாங்கத்திற்கு தெளிவான செய்தியைக் கொடுத்துள்ளனர் என்று புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் முகமட் அஸ்சாம் சாமாட் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று உதவிய கூட்டணிக் கட்சிகளான டிஎபி மற்றும் பிகேஆர் ஆகியவற்றுக்கு அவர் நன்றி கூறினார்.

mukhrizவெளியாளர்களால் ஏற்பட்ட தோல்வி

சுங்கை லீமாவ் தொகுதியிலுள்ள பாரம்பரிய இஸ்லாமிய பள்ளிகளின் முகவரியைப் பயன்படுத்தி மாணவர்களாகப் பதிவு செய்து கொண்ட வெளியூர்வாசிகள்தான் பாரிசானின் தோல்விக்குக் காரணம் என்று இப்போது கூறப்படுகிறது.

கிராமப்புறமான புக்கிட் பெசார் எப்படி அதிகப்படியான வாக்காளர்களைக் கொண்டிருந்ததற்கு இதுதான் காரணம் என்று கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் கூறினார்.

இருப்பினும், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக முக்ரீஸ் கூறினார்