சைபுடின்: அம்னோ வலச்சாரிக் கட்சியாக மாறிவருகிறது

1 saifudinநஜிப் அப்துல் ரசாக்,  2009-இல் பிரதமர் பொறுப்பு  ஏற்றதிலிருந்து நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியான  அம்னோவை மிதவாதப் பாதையில் செலுத்தவே முயன்று வந்திருக்கிறார்.

ஆனால், கட்சியில் இப்போது வலச்சாரிகளின், மலாய்க்காரர்களின் சிறப்புரிமைகளின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்வோரின் குரலே ஓங்கி ஒலித்து வருகிறது.

அண்மைய பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அந்த வலச்சாரித் தலைவர்களின் குரல்கள் மேலும் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அம்னோ வலச்சாரிக் கட்சியாக மாறிவருவதை அதன் முற்போக்குத் தலைவர்களில் ஒருவரான சைபுடின் அப்துல்லாவும் ஒப்பினார்.

“ஓரளவுக்கு அது சரிதான், கட்சி வலச்சாரிகள் பக்கமாக சென்றுள்ளது.  அதை மாற்ற வேண்டும்.  அதுவும் அம்னோ தேர்தல்கள்  முடிந்து விட்டதால் அதைச் செய்ய  இது பொருத்தமான நேரமாகும்”,  என முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சரான சைபுடின் மலேசியாகினியிடம் கூறினார்.