மாசிங்: மலேசியா உருவான விதத்தை அறியாதிருப்பது வருத்தமளிக்கிறது

1 eastதீவகற்ப மலேசியர்கள், மலேசியக் கூட்டரசு உருவாக சாபாவும் சரவாக்கும் எவ்வாறு உதவின என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்கிறார் பார்டி ரக்யாட் சரவாக் (பிஆர்எஸ்) தலைவர் ஜேம்ஸ் மாசிங். அது, தப்பெண்ணம் உருவாவதைத் தவிர்க்க உதவும் என்றவர் நினைக்கிறார்.

மாசிங், மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில், கிழக்கு மலேசிய மாநிலங்களின் தேவைகளை, உரிமைகளை, சமய நம்பிக்கைகளை, தனித் தன்மையைத் தீவகற்பத்தில் உள்ளவர்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

1 east masing“1மலேசியா என்பதில் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களாக இருந்தால் அப் புரிதல் அவசியம். ஏனென்றால், இப்போது தீவகற்ப மலேசியாவுக்கும் போர்னியோ மாநிலங்களுக்குமிடையில் இடைவெளி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

“இதற்குத் தீர்வுகாண்பது அவசியம். வரலாற்றை அறியாதிருந்தால் நம்பிக்கையின்மையும் சர்ச்சையும்தான் உண்டாகும்”,என சரவாக் நில மேம்பாட்டு அமைச்சருமான மாசிங் குறிப்பிட்டார்.

‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைக் குறிப்பிட்ட அவர், தீவகற்பத்தில் உள்ளவர்கள் சாபா, சரவாக் மக்களின் நிலையையும் தேவையையும் புரிந்துகொள்ளாததுதான் அதற்குக் காரணம் என்றார்.