புவா: சுப்ரா பொய் சொல்லுகிறாரா அல்லது புரியாமல் பேசுகிறாரா?

Minister -Subar, GST1பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சுகாதார சேவையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சுகாதார அமைச்சர் கூறியிருப்பதை டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் சாடியுள்ளார்.

டாக்டர் எஸ். சுப்ரமனியம் ஒன்று பொய் சொல்கிறார் அல்லது புரியாமல் பேசுகிறார் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கூறினார்.

பொதுவாக உடல்நலன் பேணும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் அவரது அமைச்சு ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு குறித்து ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் மற்றும் பொருள்கள் பற்றி விவரமான பட்டியலை வெளியிடும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “இது குறித்து ஊகங்களை வெளியிட்டு மக்களைக் குழப்புவதைத் தவிர்க்க வேண்டும்” என்று அனைத்துத் தரப்பினரையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், தவறான எண்ணத்தைத் தோற்று விக்கும் கருத்துகள் கூறுவதை சுப்ரமணியம் நிறுத்த வேண்டும் என்று புவா வலியுறுத்தினார்.Minister -Subar, Tony GST2

“சுகாதார அமைச்சரும் இதர பல பிஎன் தலைவர்களும் ஜிஎஸ்டி-விலக்கு பெற்றது என்றால் என்ன என்று அறியாமல் இருக்கிறார்கள் அல்லது தெரிந்தே உண்மையை மறைக்கிறார்கள் என்பது வெளிப்படையானதாகும்.

Minister -Subar, Tony GST3“அரசாங்கத்தின் ஜிஎஸ்டி வலைத்தளம் ‘ஜிஎஸ்டி-விலக்கு பெற்ற பொருள்கள்’ எவை என்பதை மிகத் தெளிவாக விளக்கப்படங்கள் வழி விளக்கம் அளித்துள்ளது”, என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினரான புவா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜிஎஸ்டி-விலக்கு பெற்ற பொருள் அல்லது சேவை என்றால் என்ன அர்த்தம்? பயனீட்டாளரிடம் கொடுக்கப்படும் பொருள் அல்லது சேவைக்கு அப்பொருளை அல்லது சேவையை கொடுப்பவர் ஜிஎஸ்டி விதிக்க மாட்டார் என்பது மட்டுமே அர்த்தமாகும். இதுதான் அதன் அடிப்படைச் சாரம் என்று புவா கூறுகிறார்.

ஆனால், இப்பொருள்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் மருத்துவமனைகள் போன்றவை அவை வாங்கும் அனைத்துப் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி கட்டித்தான் ஆகவேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

எடுத்துக் காட்டாக் புவா கூறுகிறார்: தற்போது ஒரு மருத்துவமனை ஒரு மருந்தை அதன் விற்பனையாளரிடமிருந்து ரிம50 வாங்கி அதனுடன் 10 விழுக்காடு இலாபத்தைச் சேர்த்து ரிம55க்கு ஒரு நோயாளியிடம் விற்கிறது.

“ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்னர், அந்த மருத்துவமனை அம்மருந்துக்கு ரிம50 துடன் அதற்கான 6 விழுக்காடு ஜிஎஸ்டியான ரிம3 யையும் கட்ட வேண்டும். மருத்துவமனைக்கு ஆகும் செலவு ரிம53 ஆக அதிகரிக்கிறது.

“நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் விலையை ஜிஎஸ்டிக்கு முந்திய விலையில் நிலைநிறுத்தினால் அம்மருத்துவமனை வெறும் ரிம2 அல்லது 3.8 விழுக்காடு இலாபம்தான் பெறும்”, என்று புவா விளக்கினார்.

அமைச்சர் “பகல் கனவு” கண்டு கொண்டிருக்கிறார்

ஜிஎஸ்டியால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பையும் அதனால் அவற்றுக்கு ஏற்படும் இலாப இழப்புகளையும் மருத்துவமனைகள் பெருமனதுடன்Minister -Subar, Tony GST4 ஏற்றுக்கொண்டு நோயாளிகளுக்குத் தொடர்ந்து அவற்றின் பொருள்களையும் சேவைகளையும் ஜிஎஸ்டிக்கு முந்திய விலையிலேயே மலேசிய மருத்துவமனைகள் வழங்கும் என்று சுப்ரமணியம் நம்பினால் அது அவர் பகல் கனவு காண்கிறார் என்பதாகும் என்று புவா இடித்துரைத்தார்.

கேள்வி விலைவாசிகள் உயருமா என்பதல்ல

கேள்வி மருத்தவப் பொருள்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்குமா என்பதல்ல. அது எவ்வளவுக்கு அதிகரிக்கும் என்பதுதான் கேள்வி என்று புவா குறிப்பிட்டார்.

“மருத்துவமனைகள் பேரன்பு மிக்கவை என்றும் அவை இலாபம் எதனையும் சேர்க்காமல் மருந்தின் விலை ஏற்றத்தை மட்டும் நோயாளி கட்டுவதற்கு தீர்மானிக்கின்றன என்று வைத்துக்கொள்வோம், மேற்கூறப்பட்டுள்ள எடுத்துக் காட்டின் அடிப்படையில், மருந்தின் விலை முந்திய விலையான ரிம55 லிருந்து ரிம58 க்கு உயரும்.

Minister -Subar, Tony GST5“ரிம3 அதிகரிப்பு மருத்துவமனை அரசாங்கத்திற்கு கொடுத்த ஜிஎஸ்டியாகும். இதனால், மருத்துமனை அதன் உண்மையான செலவு உயர்வை மட்டுமே நோயாளியிடமிருந்து திரும்பப் பெறுகிறது. ரிம58 கட்ட வேண்டிய நோயாளிக்கு (பயனீட்டாளருக்கு) அச்செலவு 5.5 விழுக்காடாக உயர்வு காண்கின்றது”, என்றாரவர்.

“ஆனால், பொரும்பாலான மருத்துவமனைகளும் வியாபார நிறுவனங்களும் அவற்றின் பொருள்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றுக்கான செலவோடு இலாபத்தையும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்கின்றன. மேற்கூறப்பட்ட எடுத்துக் காட்டில் இலாப அளவு 10 விழுக்காடு. அந்த மருத்துவமனை அதன் 10 விழுக்காடு இலாப அளவை நிலைநிறுத்த விரும்பினால், மருந்தின் விலை ரிம53 றுடன் இலாபமான 10 விழுக்காடு, அதாவது ரிம5.30 சேர்த்துக்கொள்ளப்படும்.

“பயனீட்டாளர் செலுத்த வேண்டிய இறுதிக் கட்டணம் ரிம58.30 ஆக உயர்கிறது. ரிம55 துடன் ஒப்பிடுகையில், இது பயனீட்டாளருக்கு முழு 6 விழுக்காடு அதிகரிப்பாகிறது அல்லது ஜிஎஸ்டி விதிப்புக்குச் சமமாகிறது”, என்று புவா மேலும் கூறினார்.

அது என்ன சில்லறையுடைய ரிம58.30? முழு ரிங்கிட்டாக்கி ரிம59.00 ஆக்கப்படுவது முற்றிலும் சாத்தியமே என்றாரவர்.

“ஜிஎஸ்டிக்கு முந்திய விலையுடன் ஒப்பிடுகையில் இது 7.3 விழுக்காடு விலை அதிகரிப்பாகும். இன்று எப்படி வெவ்வேறு    மருத்துவமனைகளுக்கிடையே காணப்படும் வேறுபட்ட கட்டணங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருக்கிறோ அவ்வாறே ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்னரும் மருத்துவமனைகளின் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் அவை விதிக்கும் கட்டணங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தும் என்பது நடைமுறைக்கு இயலாததாகும்”, என்று புவா திட்டவட்டமாகக் கூறினார்.

TAGS: