அண்மையில் கேமரன் மலையில் நீர் அணைக்கட்டு திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பெர்த்தாம் வேலி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பினாங்கு ஜ.செ.க RM 50,000.00 வெள்ளியை நன்கொடையாக வழங்கியது.
இந்நிதியை கேமரன் மலை ஜ.செ.க தலைவரான ஜெ.சிம்மாதிரி, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் லியோங் ஙா, மெந்தகாப் சட்டமன்ற உறுப்பினர் சூல்புரி, ஆகியோரின் வாயிலாக பாதிக்கப்பட்ட மக்களின் கமிட்டி தலைவரிடம் இன்று (6-11-2013) மாலை 5.00 மணிக்கு வழங்கப்பட்டது.
பழனிவேல் சம்பந்த பட்ட ஐம்பதாயிரம் கொடுக்கப்பட்ட ஆளிடம் இதையும் புடுங்கி தின்னு துப்பிடுவான் அதுதான் MIC
பினாங்கு அரசு ஐம்பதினாயிரம், சிலாங்கூர் அரசு ஐம்பதினாயிரம், மற்றும் பொதுமக்கள் இரண்டு லட்சம், ஆக, மொத்தம் மூன்று லட்சம் வெள்ளி இதுவரை வசூலாகியுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த நாற்பது மில்லியன் இன்னும் மக்களை போய் அடையவில்லை.