என்எப்சி போன்ற குளறுபடிகளைத் தடுக்க எம்ஏசிசி-இன் பரிந்துரைகள்

1 maccநேரடிப் பேச்சுகளின்வழி  கொடுக்கப்படும் குத்தகைகளையும் அக்குத்தகைகளுக்கு வழங்கப்படும் கடன்களையும், அதிலும் “அரசாங்கத்தில் உள்ளவர்களின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட”திட்டங்களை அமைச்சரவை  நுணுகி ஆராய வேண்டும் என மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி)  பரிந்துரைத்துள்ளது.

இப்பரிந்துரையை நேற்று வெளியிடப்பட்ட அதன் 2012 ஆண்டறிக்கையில்  முன்வைத்துள்ள  எம்ஏசிசி, அதில் ஆதாய முரண் ( conflict of interest) அம்சம் உண்டா என்பதை . அறிவிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும் என்றது.

நேசனல் ஃபீட்லோட் செண்டர் திட்டத்தில் ஏற்பட்டதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படாதிருக்க இப்படிப்பட்ட நடவடிக்கைகள் உதவும் என அந்த ஆணையம் கூறிற்று.