மற்றவர்களைக் குறைசொல்லுமுன்னர் டிஏபி தலைவர் கர்பால் சிங் சொந்த கொல்லைப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மூத்த அரசியல்வாதியான கர்பால் “உண்மை நிலையை அறியாதிருக்கிறார்” என மசீச மத்திய செயலவை உறுப்பினர் லொ செங் கொக் சாடினார். இவ்வளவு பேசும் கர்பால் டிஏபி-இல் மலாய்க்காரர்களைக் கூடுதலாக சேர்க்கும்படி கூற வேண்டியதுதானே என்றார்.
இன, சமய அடிப்படையில் அமைந்த அரசியல் கட்சிகளையும் சங்கங்களையும் பதிவுரத்து செய்ய வேண்டும் என்று கர்பால் கூறியதற்கு லொ இவ்வாறு எதிர்வினை ஆற்றி இருந்தார்.
“கர்பால் சொல்வதுபோல் செய்வதாக இருந்தால் தாய்மொழி கல்வி தொடர்பான அமைப்புகள், பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள சங்கங்கள் போன்றவற்றின் பதிவையும் இரத்துச் செய்ய வேண்டி இருக்கும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
தேசிய ஒற்றுமைக்கு இன அடிப்படையில் அமைந்த கட்சிகளோ சங்கங்களோ தடையல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய லொ, அதற்குத் தலைவர்களின் தரமும் உறுப்பினர்களின் மனப்போக்கும்தான் முக்கியமாகும் என்றார்.