எம்பி: மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டும்தான் ஆங்கிலக் கல்வியா?

1-kampar-mpமலேசிய இடைநிலைப் பள்ளி மாணவர்களில் சுமார் 2 விழுக்காட்டினருக்கு மட்டுமே கிடைக்கும் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பு எல்லா தேசியப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என டிஏபி கம்பார் எம்பி கோ சுங் சென் கூறினார்.

மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரி(MRSM)களுக்குச் செல்லும் மாணவர்கள் மட்டுமே எஸ்பிஎம், கேம்ப்ரிட்ஜ் அனைத்துலக இடைநிலைக்கல்விச் சான்றிதழ்(ICGSE) தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் அமரும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

“அவற்றில் (மாரா கல்லுரிகளில்) சேரும் மாணவர்களில் மிகப் பலர் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 98 விழுக்காட்டு மாணவர்களின் நிலை என்ன?

“அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமல்ல. ICGSE மாரா கல்லூரிகளுக்கு நல்லது என்றால் நாட்டில் உள்ள மற்றவர்களுக்கும் நல்லதாகத்தானே இருக்கும்”, என கோ நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.