என்எப்சி குத்தகை வழங்கப்பட்டதில் ஏன் கவனக்குறைவு? துணைப் பிரதமர் விளக்க வேண்டும்

1-mpநேசனல் பீட்லோட் செண்டர் )என்எப்சி) குத்தகை வழங்கப்பட்டதில் “கவனக்குறைவாக நடந்துகொள்ளப்பட்டது” ஏன் என்பதைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் விளக்க வேண்டும் என  அம்பாங் எம்பி சுரைடா கமருடின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அக்குத்தகை வழங்கப்பட்டதில் பல கோளாறுகள் நிகழ்ந்திருப்பதாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் அதன் 2012 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிய அவர்,   குத்தகை வழங்கப்பட்டபோது முகைதின் விவசாய  அமைச்சராக இருந்தார் என்பதால்  இதற்கு  அவர்தான் விளக்கமளிக்க வேண்டும்  என்றார்.

“அரசாங்கத்தைப் பிரதிநிதித்து என்எப்சி இயக்குனர் வாரியத்தில் உள்ளவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது மட்டும் போதாது. ஏனென்றால் கவனக்குறைவுக்கு அமைச்சர்தான் பொறுப்பு”, என்றாரவர்.