இனத் தீவிரவாதம் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல, முன்னாள் இராஜதந்திரி எச்சரிப்பு

மலேசிய அரசியல் இன மற்றும் சமய தீவிரவாதங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருமானால், அது அதன் பொருளாதாரப் போட்டித்Razali Ismail, Diplomat திறனை இழக்கச் செய்யும் என்று முன்னாள் மூத்த இராஜதந்திரி ஒருவர் இன்று எச்சரிக்கை விடுத்தார்..

பல இனங்களையும் பல சமயங்களையும் கொண்ட மலேசியாவில் விவாதங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால், அது ஆக்க நல  welfare)அரசாக மாறவே கூடாது என்று 35 ஆண்டுகள் இராஜதந்திரியாகப் பணிபுரிந்து 1998 ஆம் ஆண்டில் பதவி ஓய்வு பெற்ற ரஸாலி இஸ்மாயில் கூறினார்.

“நீங்கள் எங்கோ ஒரு பின்தங்கிய நாடாக இருக்க விரும்பினால், அது வேறு கதை.

“நாம் (பொருளாதார வளர்ச்சிக்கான) ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்…நமக்கிடையிலான அனைத்து வேறுபாடுகளையும் நாம் களைய வேண்டும்”, என்றாரவர்.

தமது கருத்தை வலியுறுத்த அவர் மலேசியாவின் போட்டியாளர்களான சிங்கப்பூர். தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உலக யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு வெளிநாட்டு மூலதனத்தைக் கவர்வதற்காக தங்களுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அவர் இராஜதந்திரியாக பணியாற்றிய பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மலேசியாவை ஒரு நிலையான நாடாகக் கருதின.

ஆனால், சமீபகாலமாக அவரது அனைத்துலக நண்பர்கள் நாட்டில் காணப்படும் பிரிவினைச் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர் என்றாரவர்.

“அவர்கள் குழப்பமடைந்துள்ளனர். அவர்களுடைய நம்பிக்கை குலைக்கப்பட்டுள்ளது…பொதுப்பணி ஊழியர்கள் என்ற முறையில், சரியானவற்றை செய்வதைவிட வேறு வழியே கிடையாது”, என்பதை அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாட்டு பொதுச் சபையின் முன்னாள் தலைவரான ரஸாலி இஸ்மாயில் சுமார் 100 உயர்மட்ட அமைச்சு அதிகாரிகள் குழுமியிருந்த கூட்டத்தில் பேசினார்.

பேராளவிலான எளிதில் உணர்ச்சிவயப்படும் தன்மமையும் மாற்றத்திற்கு எதிர்ப்பும், குறிப்பாக பூமிபுத்ரா இளைஞர்களிடையே, இருப்பதைத் தாம் உணர்ந்ததாக ரஸாலி கூறினார்.

“புதிய பொருளாதார முன்மாதிரி (நெம்) அடிப்படையில் பிரதமர் கூறும் ஆலோசனைகள் பற்றி சில பூமிபுத்ராக்கள் ஆர்வம் காட்டுவதில்லை…

“மக்களைக் கவர்ந்து இழுக்கும் விவாதங்கள், நம்மை பலவீனப்படுத்தும் மற்றவர்களின் (அரசாங்கத்தின் உதவியை) ஆதரவை நம்பி வாழும்   பண்பாட்டோடு நமது தலைவிதியை இணைப்பதின் மூலம் நமது சாத்தியக்கூறுகளை வீணாக்க நாம் அனுமதிக்கக் கூடாது”, என்று ரஸாலி வலியுறுத்தினார்.

மேலும், அரசாங்கம் அனைத்து வகையான ஊழல்களையும் எதிர்த்து சமாளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Razali Ismail, Diplomat1உலக மிதவாதிகள் இயக்கத்தின் தலைவரான ரஸாலி சமீபத்தில் இளம் ஆர்வலர்களைச் சந்தித்தப் பின்னர் தாம் கலக்கமடைந்ததாகக் கூறினார்.

“இளைய தலைமுறையினர் அரசாங்க பொது அமைப்புகள் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கி விட்டனர்’, என்றாரவர்.

அரசியல் எஜமானர்கள் நல்ல திட்டங்களையும் கொள்கைகளையும் வைத்திருக்கிரார்கள். ஆனால் அவற்றை அமலாக்கம் செய்யும் வழிமுறைகள் பெரும்பாலும் தரக்குறைவானதாக இருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

“கேள்விகள் ஏராளம் இருக்கின்றன. பொறுப்பேற்றல் பற்றிய கேள்வி திரும்பத் திரும்ப எழுந்து கொண்டிருக்கிறது…ஊழலை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால், அதை எப்படிச் செய்யப் போகிறீர்கள்?”, என்று அவர் வினவினார்.

74 வயதான ரஸாலி போலந்து, ஜெர்மனி, செக்கோஸ்லேவியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் மலேசிய தூதுவராகவும், இந்தியாவில் மலேசிய ஹைகமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர், ஐநாவுக்கான மலேசிய நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தார்.