மகாதிர்: சாகும்வரை அரசியலை விட்டு விலகமாட்டார் போலிருக்கிறது கிட் சியாங்?

1 drmஅன்பளிப்புக்களைப் பொருளாகவும் பணமாகவும்  அள்ளிக்கொடுப்பதால் மட்டும் வாக்குகளை வென்றுவிட முடியாது.

திங்கள்கிழமை, நடந்துமுடிந்த சுங்கை லிமாவ் இடைத் தேர்தல் பற்றி தம் வலைப்பதிவில் கருத்துக்களை பதிவு செய்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இவ்வாறு கூறினார்.

“அரசியல் கட்சியின் ஆதரவுக்கு அடிப்படையாக இருப்பவை தலைவர்கள், வேட்பாளர்களின் போராட்டங்களும் செயல்களும்தான்.  மெர்சிடிஸ் கார்களிலும், சக்திவாய்ந்த உயர் ரக மோட்டார் சைக்கிள்களிலும் வந்து பணத்தையும் பொருள்களையும் வாரிகொடுத்து  வாக்காளர்களைக் கவர்ந்துவிட முடியாது”, என்றாவர்.

1 drm 1அதே வேகத்தில் தம் நீண்டகால அரசியல் வைரியான லிம் கிட் சியாங் பற்றியும் குத்தலாக சில கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

“கிட் சியாங்கும்  அங்கு பரப்புரை செய்தார்.  அவர்  இன்னமும்  என் நிழலைக் கண்டு பயப்படுவதாக தெரிகிறது.  ஏனென்றால், நான் (தேர்தலில்) போட்டியிடுவதுபோல் அவர் என்னையே  குறை சொல்லிக்கொண்டிருந்தார்”.

கிட் சியாங்  அரசியலிலிருந்து ஓய்வு பெறுவாரா,  மாட்டாரா என்றும் வினவினார் மகாதிர்.

“அ964-இல்,  நான் எம்பி ஆன புதிதில்  தேவன் நாயரின் அரசியல் செயலாளராக இருந்தார் கிட் சியாங்.  பிஏபி மலேசியாவைவிட்டுப் போனதும்  கிட் சியாங் டிஏபி-யை அமைத்து அதன் தலைவர் ஆனார்.

“நான் 2003-இல் ஓய்வு பெற்றேன், கிட் சியாங் ஓய்வுபெறவில்லை. இன்னமும் டிஏபி தலைவராகவும் கேளாங் பாத்தா எம்பி-யுமாக இருக்கிறார். எப்போதுதான் ஓய்வுபெறுவார்? சாகும்வரை விடமாட்டாரோ?”, என்று  மகாதிர் குறிப்பிட்டார்.