அம்னோ வரலாற்றில் வெளிப்படையாக விலகிச் செல்லும் துணைப் பிரதமர்

“முஹைடின் நஜிப்பைக் காட்டிலும் வலுவானவராகத் தெரிகிறார். ஏனெனில் நஜிப் எதனைச் சொன்னாலும் அதற்கு முஹைடின் ஆதரவு அளிப்பதாகவே தோன்றவில்லை”

 

 

 

பெர்சே: முஹைடின் பிரதமரிடமிருந்து மீண்டும் முரண்படுகிறார்

டேனி லோ: முஹைடின் யாசின் அம்னோ வரலாற்றில் வெளிப்படையாக விலகிச் செல்லும் துணைப் பிரதமர் எனத் துணிந்து கூறலாம். முஹைடினைப் போன்று பிரதமருடன் இவ்வாறு அடிக்கடி எந்த துணைப் பிரதமரும் முரண்பட்டதில்லை.

சில சமயங்களில் முஹைடின் நஜிப்பைக் காட்டிலும் வலுவானவராகத் தெரிகிறார். ஏனெனில் நஜிப் எதனைச் சொன்னாலும் அதற்கு முஹைடின் ஆதரவு அளிப்பதாகவே தோன்றவில்லை.

‘முதலில் மலாய்க்காரன்’ என்னும் கருத்து நினைவுக்கு வருகிறது. அது குறித்து கருத்துக் கூறவும் நஜிப் மறுக்கிறார். தமக்கும் முஹைடினுக்கும் இடையில் பிளவு உள்ளது என்ற தோற்றத்தை அது தந்து விடும் என அவர் அஞ்சுகிறார்.

பல இனம்:  ‘புருட்டஸ்’ முஹைடின் மீண்டும் தலை தூக்கியிருக்கிறார். முதலில் அவர் அப்துல்லா அகமட் படாவியை முதுகில் குத்தினார். இப்போது நஜிப்பை குத்துகிறார். அவருக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது ? யார் அவருக்கு பின்னால் நிற்கின்றனர் ?

ஆனால் நான் அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. ஏனெனில் இனிமேல் யார் பிரதமராக வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யப் போகின்றனர். அம்னோவோ பெர்க்காசாவோ அல்ல.

தமது இனம் தான் முதலில் என்றும் நாடு அதற்குப் பின்னரே எனப் பிரகடனம் செய்யும் எந்த அரசியல்வாதியும் பிரதமராக வரக் கூடாது ஏன் அமைச்சராகக் கூட வரக் கூடாது.

தகுதி: காத்திருக்கும் பிரதமர் தாம் நினைப்பதைச் சொல்வதற்கு உரிமை உண்டு. யார் நஜிப் ? அவரது பதவிக் காலம் பாக் லாவை விட சிறிதாக இருக்கப் போகிறது. மூன்று எம் ( மகாதீர்-முஹைடின்-முக்ரிஸ் ) வேலை செய்கிறது. முஹைடின் விரைவில் பிரதமராகி விடுவார்.

கரடி: பிரதமராவதற்கு இது தான் வழி முறை என வரலாறு காட்டுகிறது. துங்கு அப்துல் ரஹ்மானுக்கு டாக்டர் மகாதீர் முகமட் அதனைச் செய்தார். அன்வார், மகாதீர் மீது அதனைச் செய்ய முயன்றார். நஜிப், பாக் லாவுக்கு செய்தார் (பிரதிநிதிகள் வழியாக) இப்போது நஜிப்பை விலக்குவதற்கு முஹைடின் முயலுகிறார்.

மகாதீர் அன்வாருக்கு செய்ததைப் போன்று நஜிப்பும் செய்ய முடியும் அல்லது அவருக்கு வெளியே போகும் கதவுகள் காட்டப்படும் வரையில் காத்திருக்க வேண்டும்.

ஜிமினி ரிக்கெட்: நஜிப் மீண்டும் பின் வாங்குகிறார். அம்னோவில் அவருக்கு நெருக்குதல் அதிகமாக இருப்பதை அது காட்டுகிறது.

அனைத்துலக சமூகத் தலைவர்கள் நஜிப்பை ஒதுக்குகின்றனர். பிரிட்டிஷ் அரசி அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். பெர்க்காசாவும் அம்னோவில் உள்ள அவரது எதிர்ப்பாளர்களும் அவரை அடிக்கடி இக்கட்டான சூழ்நிலையில் வைத்து விடுகின்றனர். துணைப் பிரதமரும் அடிக்கடி காலை வாருகிறார்.

1 எம்: முஹைடின் கருத்துக்கள் எனக்கு வியப்பளிக்கவில்லை. வாக்காளிப்பு முறையை சீர்படுத்தப்படுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்யும் போது பிஎன் வாய்ப்புக்கள் பாதிக்கப்படும். அடுத்த பிரதமராக அவர் பொறுப்பேற்க முடியாது என்பதே அதன் பொருள் ஆகும்.

இரண்டாவதாக பிரதமருடைய செல்வாக்குப் பெருகுவதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்கும் முன்னர் கூறியதே காரணமாகும்.

குறுகிய பெரும்பான்மையில் பிஎன் வெற்றி பெற அனுமதிப்பதே முஹைடினுக்கு சிறந்த  சூழ்நிலையாகும். அடுத்து அவர் பதவி துறக்குமாறு நஜிப்பை நெருக்க முடியும். ( நஜிப் அப்துல்லாவுக்குச் செய்ததைப் போல ) தேர்தல் முறையை திருத்தா விட்டால் அது தான் நடக்கும்.

அகராதி: கூட்டரசு அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்பு என்னும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றாத முஹைடினை நஜிப் நீக்க வேண்டும்.

மிகவும் விவேகமான மக்களை ஈர்க்கக் கூடிய ஒருவரை அந்தப் பதவிக்கு நஜிப் நியமிக்க வேண்டும்