சரவாக்கின் நில மேம்பாட்டு அமைச்சர் ஜேம்ஸ் மாசிங், செம்பனை எண்ணெய் நிறுவனங்களும் வெட்டுமர நிறுவனங்களும் முரடர்களையும் குண்டர்களையும் வைத்து மக்களை மிரட்டி வருவது குறித்து கவலை கொண்டிருக்கிறார்.
போலீசார் இதைப் பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காதிருப்பது மேலும் வருத்தம் தருவதாக அவர் சொன்னார்.
“தங்கள் பாரம்பரிய நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யும் செம்பனை தோட்ட நிறுவனங்களை எதிர்க்கும் நில உரிமையாளர்களை குண்டர்கள் மிரட்டுகிறார்கள்.
“அவர்கள் (நில உரிமையாளர்கள்) தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கிறார்கள். இதை (உள்துறை அமைச்சர்) ஜாஹிட் ஹமிடியிடம் தெரியப்படுத்தினேன். புகார்களை அவருக்கே நேரடியாக அனுப்பச் சொன்னார். அப்போதுதான் புகார்களின்மீது விசாரணை நடத்தாதவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்”, என பார்டி ரக்யாட் சரவாக் தலைவருமான மாசிங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளில் குண்டர்களின் உருட்டல் மிரட்டல் பற்றி போலீசில் நிறைய புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், அவைமீது நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. பல நேரங்களில் புகார் செய்தவர்களே கைது செய்யப்பட்டார்கள்.
இதனால், மக்கள் போலீசை நம்புவதில்லை என்று மாசிங் குறிப்பிட்டார்.
எப்பொழுதே மக்களுக்கு தெரிந்து நாறி நாற்றம் அடித்துவிட்டது .
பிறகு ஏன் இன்னும் நல்நெறி இல்லாமல் பாமரகளை உருட்டி மிரட்டும் இந்த குண்டர்கும்பல் BN அரசை தொடர்ந்து ஆதரித்து
அதனுடன் ஒட்டி சலுகைகள் தரும் சுகங்களை வெட்கமில்லாமல் அனுபவித்து வருகிறீர்கள்….? இங்கு மேற்கிலும் அனேக BN உறுப்பு கட்சி தலைவர்களின் நிலையும் இதே இழிநிலைதான். மானங்கெட்ட வாழ்க்கை.
சபாஷ் ஜாஹிட் ஹமிடி ! அட வேமானி! உன் பக்கத்துக்கு வீடு பற்றி எரியுதே என்று மக்கள் கூச்சல் போடுகிறார்கள் , நீயோ , என்னிடம் வந்து நேரில் புகார் கொடுங்கள் என்கின்றாயே ! நாடு உருப்படும் ??