மலாய் மொழி நாளிதழ்களான உத்துசான் மலேசியா மற்றும் பெரித்தா ஹரியான ஆகியவற்றில் அரசாங்க தொடர்பு நிறுவனங்கள் (ஜிஎல்சி) அதிகமான அளவில் விளம்பரம் செய்து அவற்றை காப்பாற்ற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஜிஎல்சி தலைமை அதிகாரிகளுக்கு தாம் இது குறித்து கடிதங்கள் அனுப்பியுள்ளதாக துணை நிதி அமைச்சர் அஹமட் மாஸ்லான் இன்று கோம்பாக்கில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.
உத்துசான் மலேசியாவும் பெரித்தா ஹரியானும் நாட்டிற்காக நடத்திய போராட்டங்களை இந்நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
பூமிபுத்ராக்கள் 68 விழுக்காட்டினர்
பிரதமர் புதிதா அறிவித்துள்ள பூமிபுத்ரா பொருளாதார ஆளுமை செயல்திட்டம் (பிஇஇ) மற்றவர்களை ஓரங்கட்டுவதற்கல்ல. பூமிபுத்ராக்கள் 68 விழுக்காட்டினர். அவர்கள் பொருளாதாரத்தில் வலுவாக இருந்தால் நாடு வலுவாக இருக்கும். அதனால் மற்ற இனத்தினரும் நலன் பெறுவர் என்றாரவர்.
இன்றைய தீபாவளி நிகழ்ச்சியை பேரின்பம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் பெர்காசாவின் இப்ராகிம் அலியும் புது யுக சீன சங்கம் (பெர்சிஸ்மா) என்ற அமைப்பின் தலைவர் எண்டி சோய்யும் கலந்து கொண்டனர்.
யாருயா அந்த தமிழா…!!!
உத்துசானில் விளம்பரமா ? அப்பதான் நாடு சீக்கிரம் உருப்படும் ! பெகாசாவின் கண்டுபிடிப்பு !
அதிக விளம்பரம் படுத்துங்க, சூபரா இருக்கும்…!!!
உத்துசான் பெரித்தானுக்கு இப்ப அரசங்கமே இலவச மார்க்கெட்டின் செய்யரது படும் கேவலமாய் இருக்கு….
இந்தியர்கள் (மலையாளி ) இப்ராகிம் அலியை வைத்து கூத்து அடிப்பது எனக்கு அறவே பிடிக்கவில்லை.