கேஎல் ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் உடைப்பு மீண்டும் தொடங்கியது; ஜெயதாஸ் கைது (அண்மையச் செய்தி)

Temple - kl Demolition1தீபாவளி கொண்டாட்டம், திறந்த இல்ல உபசரிப்புகள், பத்துமலையில் அமைச்சர்களுக்கு, இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட, ஏகபோக விருந்து ஆகிய அனைத்தும் முடிவுற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர், கோயில் உடைப்பு விழா மீண்டும் தொடங்கி விட்டது!

ஒரு வழக்குரைஞரும், பிகேஆர் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஜெயதாஸும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில் கைது செய்யப்பட்டனர் என்பதை கோயில் நிருவாகக் குழு செயலாளர் நளினி நானி தொடர்பு கொண்ட போது உறுதிப்படுத்தினார்.

சர்ச்சைக்குரிய இந்தக் கோயில் உடைப்பு விவகாரம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் கோலாலம்பூர் நகராட்சி மன்றம் கோயில் வளாகத்திற்குள் ஒரு சுவரை வலுக்கட்டாயமாக கட்டிய போது எழுந்தது.

அப்போது, ஜெயதாஸும் அவரது சகா கே நாகராஜனும் டிபிகேஎல் அதிகாரிகளைத் தடுத்து நிருத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

Temple - kl Demolition2இன்று காலை மணி 11.30 வரையில், இரண்டு புல்டோசர்கல் கோயிலை இடித்துத்தள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்தன. அப்போது சுமார் 50 பேலீஸ்காரர்களும் டிபிகேஎல் அதிகாரிகளும் அங்கு கூடியிருந்தனர். கோயிலுக்குச் செல்லும் சாலையும் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்கள் கோயில் கூரையின் ஒரு பகுதியை அகற்றுவதையும் சுற்றியுள்ள மரங்களை வெட்டித்தள்ளுவதையும் காண முடிந்தது.

இக்கட்டத்தில் கோயிலில் எவ்வளவு பகுதி உடைக்கப்படுவதற்கு உள்ளாகும் என்பது தெரியவில்லை.

கோயில் உடைப்பு வேலை நில மேம்பாட்டாளர் கோரும் 8 அடி நிலத்திற்கு அப்பால் சென்றுள்ளது என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கூறினார்.

Temple - kl Demolition3எந்த முன்னறிவிப்பும் இன்று காலை மணி 7.00 க்கு வந்து தங்களுடைய கோயில் உடைப்பு Temple - kl Demolition4வேலையைத் தொடங்கினர் என்று அவர் கூறிக்கொண்டார்.

மேம்பாட்டாளரின் கோரிக்கைக்கு எதிராகக் கோயில் நிருவாகக் குழு அதன் எதிர்ப்பில் உறுதியாக இருப்பதற்குத் தண்டனையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து விவாதிக்க கோயில் நிருவாகக் குழு கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் லோக பால மோகன் ஜெயநாதனுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பின்னரும் இந்த உடைப்பு வேலை தொடங்கப்பட்டுள்ளது என்றாரவர்.

இவ்விவகாரம் குறித்து நாளை காலையில் தானும், இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போங் குய் லுன், அவரும் அங்கிருந்தார், ஆகிய இருவரும் நாடாளுமன்றத்தில் ஓர் அவசரத் தீர்மானத்தைத் தாக்கல் செய்யப் போவதாக அவர் மேலும் கூறினார்.

 

போராட்டம் தொடரும் என்பது நிச்சயம்

 

Temple - kl Demolition5நவம்பர் 19 இல் துணை அமைச்சர் லோக பாலாவுடனான சந்திப்பு கோயிலை மேம்படுத்துவது பற்றியதாகும். அதற்கான கட்டடக்கலை வரைவுகளை கொடுக்குமாறு அவர் கேட்டிருந்தார் என்று கோயிலின் சட்ட ஆலோசகர் முன்னாள் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் கூறினார்.

கோயில் நிருவாகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ள கட்டடக்கலைஞர் அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

“ஆகவே, இவர்கள் ஏன் இது போன்றவற்றை எங்களுக்குச் செய்கிறார்கள் என்று அதிர்ச்சிTemple - kl Demolition7 அடைந்துள்ளோம். இதில் தீய நோக்கம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. எங்களைத் தவறான பாதையில் இட்டுச் சென்று, பின்னர் இப்படி எங்களுக்கு எதிராகத் திரும்புகிறீர்கள்.

“நாங்கள் எவருடனும் சண்டையிடவில்லை. 101 வருடங்களாக(நாங்கள் இங்கு இருந்து வருகிறோம்). இங்கு இருக்க விரும்புகிறோம். இங்குள்ளச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நாங்கள்  இக்கோயிலை எங்களுடையச் சொந்த செலவில் ஒரு தோட்ட கோயிலாக மாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம்”, என்று  மனோகரன் மேலும் கூறினார்.

கோயில் உடைக்கப்பட்டது பற்றிய அடுத்த நடவடிக்கை, சட்ட நடவடிக்கை உட்பட, குறித்து கோயில் நிருவாகம் ஆலோசித்து வருகிறது என்றாரவர்.”

“ஒன்று மட்டும் நிச்சயம்: நாங்கள் தொடர்ந்து போராடுவோம்”, என்றாரவர்.