அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவில் கூடுதல் விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்ட நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானுக்கு மசீச கடும் கண்டனம் தெரிவித்தது.
அமைச்சரின் அதிகாரம் தவறாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று கண்டித்த மசீச உதவித் தலைவர் கான் பெங் சியு, உத்துசான் போன்ற தனியார் ஊடக நிறுவனத்துக்கு ஆதரவு கொடுப்பதோ உதவுவதோ அரசாங்கத்தின் பொறுப்பல்ல என்றார்.
“சினார் ஹரியான், மெட்ரோ, கோஸ்மோ, ஸ்டார், சின் சியு சிட் பாவ், ஓரியெண்டல் டெய்லி போன்றவையும் மற்ற ஊடகங்களும் சந்தையில் போட்டி போட்டுக்கொண்டிருக்கும்போது உத்துசானுக்கு மட்டும் பொதுப் பணத்தைக் கொடுத்து தனிச்சலுகைகாட்ட எந்தக் காரணமும் இல்லை”, என்றார்.