பிரதமர் செல்லக்கூடாது! கிள்ளானில் பேரணி!

najibஇலங்கை அரசு இலட்சக்கணக்கான அதன் குடிமக்களைக் கொன்று குவித்திருக்கிறது. அந்நாட்டின் ஆயிரக்கணக்கான பெண்கள் உலக வரலாறு கண்டிராத வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கொடுமைகளை இழைத்தது அந்நாட்டு சாதாரண மக்கள் அல்ல. அந்நாட்டு இராணுவப் படையினர்.

அந்நாட்டு இனவெறியர்களின் கொடூரச் செயல்களை உலக மக்கள் கண்ணாரக் கண்டனர். கண்டனம் தெரிவித்தனர். காலம் கடந்த பின்னராவது ஐக்கிய நாட்டு சபை நிபுணர்கள் குழுவை அமைத்து ஆய்வு மேற்கொண்டது. ஐநாவின் மனித உரிமை மன்றம் ஆய்வுகளை மேற்கொண்டது. தனிப்பட்ட அரசு சார்பற்ற அமைப்புகளும் தனி மனிதர்களும் மேற்கொண்ட ஆய்வின் வழி அந்நாட்டு தலைவர்களும் இராணுவப் படையினரும் புரிந்த அட்டூழியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

அந்நாட்டு தலைவர்களும் இராணுவப் படையினரும் போர்க் குற்றம் புரிந்துள்ளனர். அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

segaran copyநவம்பர் 15-17 இல் சிறீ லங்காவில் நடைபெரும் காமன்வெல்த் மாநாட்டில் சிறீலங்க அதிபர் காமன்வெல்த் மாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டு அவர் அப்பதவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்வார். அந்த இரண்டு ஆண்டுகளில் காமன்வெல்த் நாடுகளில் மனித உரிமைகள் வளர்ந்து மிளிர்வதை அவர் உறுதி செய்வார். இதை நாம் நம்ப வேண்டும்.

நமது பிரதமர் நஜிப் அவர்களின் கடப்பாடு என்ன?

அவர் கொழும்பு செல்வது நமக்கு அவமானம், எனவே அவர் செல்ல கூடாது என்பதை வலியுறுத்த நாளை, 12 நவம்பர் 2013, மாலை 6.30 மணியளவில் துங்கு கிள்ளான் செட்டி மைதானத்தில் ஒரு பேரணி நடைபெறும் என்று சிலாங்கூர் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது.

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அதன் செயலாளர் எல். சேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.