55 அரசு அதிகாரிகள் ஊழல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது

1 razali ibrahimஅரசு ஊழியர்களின் ஒழுக்கக் கேடுகளைப் புலன் ஆய்வு செய்யும் சிறப்புக் குழு, அக்டோபர் 28 வரை, மொத்தம் 55 அரசு ஊழியர்கள் ஊழலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளது.

அக்குழு 11 அமைச்சுகளிலும் அரசாங்க அமைப்புகளிலும் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து இதைக் கண்டறிந்ததாக பிரதமர்துறை அமைச்சர் துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம் கூறினார்.

2012ஆம் ஆண்டு  தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை  அரசுதுறைகளில்  நிலவும் ஒழுக்கக்கேடுகள் பலவற்றைச் சுட்டிக்காட்டிக் கண்டித்திருந்ததை  அடுத்து  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,  கடந்த மாதம் 2014 பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது  அச்சிறப்புக் குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.  அக்குழுவுக்கு அரசாங்க தலைமைச் செயலாளர் அலி ஹம்சா தலைமை தாங்குகிறார்.