பாடாங் செராய் எம்பியும் பிகேஆர் உதவித் தலைவருமான என். சுரேந்திரன், நாடாளுமன்றக் கூட்டத்திலிருந்து இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டார். கோலாலும்பூர், ஜாலான் பி.ரம்லியில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் ஆலய உடைப்புமீது அவசரத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயன்றபோது மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அவரை வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
அவசரத் தீர்மானத்தை முன்வைத்த சுரேந்திரன் அதற்கான காரணங்களை எடுத்துச்சொல்ல முற்பட்டபோது அவர் மக்களவைக் கூட்டத்தைத் தாமதப்படுத்தப் பார்க்கிறார் என்று கூறி பண்டிகார் அவரை மக்களவையிலிருந்து வெளியேற்றினார்.
அந்த கோவில் நிலம் யாருக்கு சொந்தம் ??????
வாசகர்..,யாராவது தெரிவிக்க முடியுமா? நன்றி.
இதுதான் மலேசிய மக்களவை ஜனநாயகம்!
அய்யா சுப்ரா அந்த நிலம் ஹப் செங் நிறுவனத்திற்கு சொந்தம்.
தொடரட்டும் உங்கள் சேவையும் உரிமைக்குரலும்….
யாராவது அமெரிக்க ,பிரிட்டிஷ் ஆஸ்திரேலியா,நியூ ஜீலாந்து சட்ட சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று கூற முடியுமா? எது ஜனநாயகம்>? இதிலிருந்தே இங்குள்ள மடையர்கள் யார் என்று புரியும். எல்லாம் தில்லு முள்ளு திருகு தாளம்
இது அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் நடக்கும்– இதில் சந்தேகமே இல்லை. அதிலும் நம் இன சம்பந்த பட்ட எதற்கும் அனுமதியில்லை. ஊ…. இருக்கும் வரை அம்னோ காரன் களுக்கு கொண்டாட்டம் தான்
இந்த பண்டிக்கார் அமீனை தூக்க வழி சொல்லுங்கப்பா !
வாய்மையே வெல்லும் உங்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றலாம் மக்கள் மனங்களில் இருந்து உங்களை எந்தகொம்பனாலும் வெளியேற்றவே முடியாது உண்மையில் தன்மான தமிழர் நீங்கள்
Typed with Panini Keypadva
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்..கவலை வேண்டாம் எம் பி அவர்களே…தொடரட்டும் உங்கள் சேவை.இது மலேசியா ஜனநாயகம்.
கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத பண்டி [கார் ] அந்த நாற்காலியில் உட்கார அருகதை அற்றவர் இவர் பதவி விலகவேண்டும் .
தமிழர் நந்தா; பகாங் இஸ்லாமிய சமய இலாகா அதிகாரியை தூக்கியவர்கள் இதற்கும் வழி சொல்ல வாய்ப்பு இருக்கிறது!