தேர்தல் சீரமைப்புக்காக போராடும் கூட்டமைப்பு(பெர்சே)க்கு, மனித உரிமை போராளியான மரியா சின் அப்துல்லா, நவம்பர் 30-க்குப் பின்னர் தலைவராவார் எனத் தெரிகிறது.
பெர்சேயில் இடம்பெற்றுள்ள 19 என்ஜிஓ-களில் 13, தலைவர் பதவிக்கு மரியா சின்னை நியமனம் செய்துள்ளன.
இதனைத் தெரிவித்த மூவரடங்கிய தேர்தல் குழு, அம்மாதம் 30 ஆம் நாள் பெர்சே பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முதல்முறையாக தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தது.