வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை பரிவர்த்தனை முடிவுக்கு வந்தபோது சைட் மொக்தார் அல்புகாரியின் தலையாய தொழில்நிறுவனமான எம்எம்சி பங்குகளின் சந்தை மதிப்பு ரிம8.22 பில்லியன். அதில், சைட் மொக்தாருக்குள்ள பங்குரிமை 51.76 விழுக்காடு. அதன் மதிப்பு ரிம4.25 பில்லியன்.
அவரது இன்னொரு முக்கிய நிறுவனமான டிஆர்பி ஹைகோமின் சந்தை மதிப்பு ரிம4.95 பில்லியன். அதில் அவரது பங்குரிமை 55.92%. அதன் மதிப்பு ரிம2.77 பில்லியன்.
ஆக, அவ்விரண்டிலுமே அவர் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு ரிம7 பில்லியனையும் தாண்டிச் செல்கிறது.
இவ்வாண்டு தொடக்கத்தில் ஃபோர்பஸ், சைட் மொக்தாரை யுஎஸ்3.3 பில்லியன் (ரிம10.5பில்லியன்) சொத்து வைத்திருப்பவர் என மதிப்பிட்டு மலேசிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் அவருக்கு ஏழாவது இடத்தைக் கொடுத்திருந்தது.
ஆனால், சைட் மொக்தாரின் உண்மையான சொத்துமதிப்பை அளவிடுவது எளிதல்ல. அது, சொத்துக்கள், பங்குகள் எனப் பல்வகைப்பட்டது.
“எவ்வளவோ சொத்துக்கள்…. அவரின் சொத்துமதிப்பை அவர் மட்டுமே அறிவார்”, என்கிறார் அவரை நன்கறிந்த ஒருவர்.