அம்னோவுக்காக மாணவர்கள் ‘கோணல்’ வரலாற்றில் தேர்ச்சிபெற வேண்டியுள்ளது

tazlimஎஸ்பிஎம் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சிபெறுவதைக் கட்டாயமாக்கியதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக Kempen Sejarah Sebenar Malaysia (KemSMS) கருதுகிறது.

அதனால்  மோசமான விளைவுகள் நேரலாம் என KemSMS தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம் எச்சரித்தார்.

“வரலாற்றுப் பாடத்தில் அரசியலைப் புகுத்துவது இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையும் மோசமாக பாதிக்கும்”, என்றாரவர்.

வரலாற்றுப் பாடத்திட்டத்தில் மலாய், இஸ்லாமியப் பங்களிப்புக்குத்தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மலேசிய வரலாறு என்பது பல்லின, பல-சமயப் பார்வை கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆனால், கட்சிநலன் என்னும் குறுகிய-பார்வை கொண்ட அரசாங்கம் அதை வேண்டுமென்றே புறக்கணித்து வருகிறது என்று தஸ்லிம் கூறினார்.