செர்டாங் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஐசியு பகுதியில் உட்கூரை இடிந்து விழுந்தது

hospiசெர்டாங் மருத்துவமனையில் உட்கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. கடந்த மூன்றாண்டுகளில் நான்காவது தடவையாக இப்படி நிகழ்ந்துள்ளது.

இந்தத் தடவை, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர கவனிப்புப் பகுதியில் உட்கூரையிலிருந்து சில மரத்துண்டுகள் விழுந்ததாக ஹரியான் மெட்ரோ அறிவித்துள்ளது.

hospi 1சம்பவம் அதிகாலை மணி 1.30க்கு நிகழ்ந்ததாக மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஆர்டி ஆவாங்-கை மேற்கோள்காட்டி அது கூறிற்று.  நல்ல வேளையாக யாரும் காயமடையவில்லை.

செப்டம்பர் 30-இல், மகப்பேறு பகுதியின் கூரை இடிந்து  விழுந்தது.

செர்டாங்  மருத்துவமனையில்  முதல்முறை கூரை இடிந்து விழுந்தது 2011, ஜனவரி 30-இல்.  அதில் யாருக்கும் சேதமில்லை. ஆனால், 2012, ஆகஸ்டில் அவசர சிகிச்சைப் பிரிவு உட்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று தாதியரும் ஒரு மருத்துவ அதிகாரியும் காயமடைந்தனர்.