சிறப்புத் தூதர்களின் சம்பளத்தைக் குறைக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

simமுன்பு அமைச்சர்களாக இருந்து இப்போது சிறப்புத் தூதர்களாக உள்ள மூவருக்கு வழங்கப்படும் அதிகப்படியான சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றம் தள்ளுபடி செய்தது.

சிறப்புத் தூதர்களாக இருக்கும் அந்த மூவர்- முன்னாள் ரொம்பின் எம்பி ஜமாலுடின் ஜர்ஜிஸ்(அமெரிக்கா), மசீச முன்னாள் தலைவர் ஒங் கா திங் (சீனா), முன்னாள் மஇகா தலைவர் ச.சாமிவேலு (இந்தியா) ஆகியோரவர்.

தீர்மானத்தைக் கொண்டு வந்த  சிம் ட்ஸே ட்சின்(பிகேஆர்- பாயான் பாரு),  அவர்கள் ஒவ்வொருவரும்  மாதம் ரிம27,227. 20 சம்பளம் பெறுவதாக சொன்னார்.

“அமைச்சராக உள்ள ஆராவ் எம்பி (ஷஹிடான் காசிம்)-இன் சம்பளம் ரிம14,907.20 தான். அவரின் சம்பளத்தைவிட அவர்கள் இரட்டிப்புச் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களுக்கு அமைச்சர் தகுதியும் உண்டு. அமைச்சருக்குள்ள சலுகைகள் அலவன்சுகளையும் அனுபவிக்கின்றனர்”.

அரசாங்கம் பற்றாக்குறை பிரச்னையை எதிர்நோக்குவதால்,  பொதுப்பணத்தைக் கொண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு “நிதியுதவி” செய்வதை நிறுத்த எம்பிகள் உதவ வேண்டும் என சிம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அவரது வேண்டுகோள் எடுபடவில்லை. தீர்மானம் தோற்கடிப்பட்டது.