ரிம270 மில்லியன் செலவிட்டும் பள்ளிகளில் ஆங்கிலமொழி தரம் உயரவில்லை

mpயுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள், மாணவர்களின் ஆங்கிலமொழி தரம் தாழ்ந்து போயிருப்பதைக் காண்பிக்கின்றன. அப்படியானால்,  பள்ளிகளில் ஆங்கிலமொழி தரத்தை  உயர்த்த  ஆலோசகர்களுக்கு ரிம270 மில்லியன்  செலவிடப்பட்டதே,  அது என்னவானது என்று  கேள்வி  எழுப்புகிறார்  புக்கிட் பெண்டேரா எம்பி ஜைரில் கீர் ஜொஹாரி.

மூன்றாண்டுகளாக ஆலோசகர்களை அமர்த்தி அவர்களின்  அறிவுரைகளுக்காக பெரும்தொகை செலவிட்ட பின்னர்  ஆங்கிலமொழி தேர்ச்சி விகிதம்  கூடியிருக்க வேண்டும்.

ஆனால், ஆங்கிலப் பாடத்தில் 74.4 விழுக்காட்டினர்தான் குறைந்தபட்ச தேர்ச்சியான சி பெற்றனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட மூன்று விழுக்காடு குறைவாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், தாய்மொழிப் பள்ளிகளின் அல்லது  தேசிய-வகைப் பள்ளிகளின் ஆங்கிலமொழி தேர்ச்சி விகிதம்  அதிகரித்திருந்தது.

“அதாவது வெளிநாட்டு  அறிஞர்களின்  வழிகாட்டுதல் கிடைக்காத தேசிய-வகைப் பள்ளிகள் அம்மொழியில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் கொண்டுள்ளன. அதே வேளை அரசாங்கம் மூன்றாண்டுகளில்  தேசிய தொடக்க நிலை பள்ளிகளில் ஆங்கிலமொழி கற்றல்-கற்பித்தலுக்கு ரிம270 மில்லியன்  செலவிட்டிருந்தும்கூட தேசியப் பள்ளிகளின் முடிவுகள் சரிவு கண்டிருந்தன”, என்றாரவர்.

TAGS: