ஓராங் ஆஸ்லிகளை இழிவுபடுத்திய பூங்கா அதிகாரி மன்னிப்பு கேட்டார்

asliபகாங் வனவிலங்கு தேசியப் பூங்கா காப்புத்துறை அதிகாரி ஒருவர், ஓராங் அஸ்லிகள் சமூகத்தினர் “சுற்றித்திரியும் விலங்குகள்”போல் நடந்துகொள்ளக் கூடாது என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஹசான்  காசிம், என்னும் அந்த அதிகாரி முகநூலில்,  ஓராங் அஸ்லிகள் “விலங்குகள்”போல் நடந்துகொள்ளக் கூடாது என்றும் “காடுகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்குத்தான் கானகம் அவற்றின் தாயகம்”, என்றும் குறிப்பிட்டு அவர்களுக்கு பெல்டா-போன்ற திட்டங்கள் தேவை என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதனால் ஓராங் அஸ்லிகள் ஆத்திரமடைந்தனர்.

அதை அறிந்த ஹசான், அது “தனிப்பட்ட ஒரு கருத்து”,வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரி என்ற முறையில் சொன்ன கருத்தல்ல என்றார்.

“அப்படிச் சொன்னதற்காக வருந்துகிறேன். தீய நோக்கத்துடன் சொல்லவில்லை. சரியாக சிந்திக்காமல் சொல்லி விட்டேன்”, என மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

தம் துறைத் தலைவரும் தம்மைக் கண்டித்தார் எனவும் ஹசான் கூறினார்.