ஜப்பானிய நிறுவனம் பினாங்கில் ரிம1.3 பில்லியன் முதலீடு

itoஉலகம் முழுவதும் பொருளாதாரம் சற்று சுணக்கம் கண்டுவரும் வேளையில் ஜப்பானிய நிறுவனமொன்று பினாங்கில் ரிம1.3 பில்லியன் முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறது. அதன் பயனாக அடுத்த ஆண்டில் 1,500 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

ஏற்கனவே மலேசியாவில் செயல்பட்டுவரும் இபிடென் எலக்ட்ரோனிக்ஸ் மலேசியா என்னும் நிறுவனம், பினாங்கு அறிவியல் பூங்காவில் அதன் இரண்டாவது தொழிற்சாலையை அமைத்து அதன் தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

இது 2014-இல் அந்நிறுவனம் செய்யும் மிகப் பெரிய முதலீடாகும் என அதன் துணை நடவடிக்கை நிர்வாகி சொதாரோ ஈதோ கூறினார்.