சுரேந்திரனின் இடைநீக்கம் ‘நிலை ஆணைகளுக்கு எதிரான ஒன்று’

parl 1பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரனுக்கு  நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாத இடைநீக்கம் என்பது “அதிகப்படியான” ஒன்று எனவும் அது நிலை ஆணைகளை மீறிய ஒன்று எனவும் சுதந்திரத்துக்குக் குரல்கொடுக்கும் வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியுள்ளது.

சுரேந்திரன் அவருக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துகளால் ஆத்திரமடைந்திருந்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா (வலம்) “சுய-நல” நோக்குடன் நடந்து கொண்டிருக்கிறார் என அந்த என்ஜிஓ குறிப்பிட்டது.

amin muliaநிலை ஆணைகளின்படி பின்பற்ற வேண்டிய பல நடைமுறைகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி அவற்றை அது பட்டியலிட்டது.

பிரதமர்துறை கொண்டுவந்த அத்தீர்மானம் எந்த விதியின்கீழ்  கொண்டுவரப்படுகிறது என்ற குறிப்புகூட அதில் இல்லை.

“அவைத் தலைவர் அதை ஏற்றுக்கொண்டதுடன் அது 27-வது விதியின்கீழ் கொண்டுவரப்படுவதாக பிரதமர்துறையின் சார்பில் விளக்கமும் கொடுத்தார்”, என அந்த அமைப்பின் நிறுவனர் எரிக் பால்சன் கூறினார்.

பொதுநலன் சம்பந்தப்பட்ட தீர்மானங்களை மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட 24-மணி நேரத்துக்குள் விவாதத்துக்கு ஏற்க முடியும் .இந்தத் தீர்மானம் பொதுநலன் சம்பந்தப்பட்டதுதானா என்ற விவாதமும் நடக்கவில்லை விளக்கமும் கொடுக்கப்படவிலை என்றாரவர்.

இந்த அதிகப்படியான நடவடிக்கை  ஜனநாயகத்தைத்  தகர்க்கும் கொடூரச் செயலாகும் என்றவர் சொன்னார்.