ஸுனார்: கார்ட்டுன் நூலை அச்சடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது

cartoonமலேசியாவில் அரசியல் கேலிச் சித்திரம் வரைவது ஆபத்தான வேலையாக இருக்கிறது என்கிறார் பிரபல கேலிச்சித்திர ஓவியர் ஸுனார்.

அவரது புதிய கேலிச்சித்திர நூலான ‘Pirates of the Carry-BN’-னை அச்சடிக்க   10 அச்சகங்களை அணுகியபோது பத்தும் மறுத்து விட்டன.  இறுதியாக ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்டது.   “அவர்களும் தங்கள் பெயரைப் போடக்கூடாது அப்போதுதான் முடியும் என்றார்கள். அச்சிடும் வேலை எல்லாம் இரவில்தான் நடந்தது.  ஏதோ ஆபாச நூலை அச்சடிப்பதுபோல் நடந்துகொண்டார்கள்”, என்றவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இதற்குமுன் அவரது  நூல்கள் வெளிவந்த  2009-இலும் 2010-இலும் நூல்களை  அச்சடித்த அச்சகங்கள்  உள்துறை அமைச்சின் அதிரடிச் சோதனைகளுக்கு இலக்காகின  என்பதால்  ஸுனாரின்  நூல்களை அச்சடிப்பதென்றால் அச்சகங்கள் பயப்படுகின்றன.