டிஏபியும் பிகேஆரும் பாஸ் கட்சியின் கடும் போக்காளர்களைத் தற்காத்துப் பேசுவதை விடுத்து 1993-இல் இயற்றப்பட்ட கிளந்தான் ஷியாரியா குற்றவியல் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்வதற்கு வழிகாண வேண்டும் என மசீச வலியுறுத்தியுள்ளது.
நாடும் சரி, கிளந்தான் மாநிலமும் சரி இரண்டு வகை குற்றவியல் சட்டங்களைக் கொண்டு செயல்பட முடியாது என மசீச செயலாளர் டான் கென் டென் கூறினார்.
“மேலும், கிளந்தானில் ஊராட்சி மன்றங்கள் வைத்துள்ள துணை-விதிகளால் முஸ்லிம்-அல்லாதாரின் ட பிழைப்பும் வாழ்க்கைமுறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன”, என டான் குறிப்பிட்டார்.
BN அமைச்சர் ஒப்புதல் கொடுத்துள்ளாரே ! அதுவும் பிரதமர் துறை அமைச்சர் , ஹுடுத் சட்டத்தை வரவேர்கிறாரே , ம சீ ச ஏன் இதைப்பற்றி வினா எழுப்பவில்லை ?? அங்கேயும் உள் கருத்துவேறுபாடுகள் உள்ளன!