பொம் பொம் தீவு, சொத்துவரி அதிகரிப்பு மீதான தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன

1 parlஇன்று மக்களவையில் மாற்றரசுக் கட்சியினர் கொண்டுவந்த இரண்டு தீர்மானங்கள் மக்களவை துணைத் தலைவர் ரொனால்ட் கியாண்டியால் தள்ளுபடி செய்யப்ப்பட்டன. ஒன்று பொம் பொம் தீவில் தைவானிய தம்பதிகளில் ஒருவர் கொல்லப்பட்டு இன்னொருவர் கடத்தப்பட்ட சம்பவம் பற்றியது; இன்னொன்று கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்தின் சொத்துவரி அதிகரிப்பு பற்றியது.

முதல் தீர்மானத்தை கோத்தா கினாபாலு எம்பி ஜிம்மி வொங் கொண்டு வந்தார். அது, எதிரணியினர்  தீர்மானங்கள் கொண்டு வரும்போது சொல்லப்படும் இது “அவசரமானது அன்று” என்ற காரணம் கூறப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

டிபிகேஎல்-லின் சொத்துவரி அதிகரிப்பு மீதுபுக்கிட் பிந்தாங் எம்பி போங் கூய் லுன்  கொண்டு வந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டதற்குஒரே நேரத்தில் இரண்டு தீர்மானங்களுக்கு இடமில்லை என்ற தொழில்நுட்பக் காரணம் கூறப்பட்டது.

போங், வொங் ஆகிய இருவருமே டிஏபி எம்பிகள்.