வெளிநாட்டவர் மைகார்டுகள் பெறுவது எளிதாக இருப்பதைப் பார்க்கையில் அவர்களுக்கும் காணாமல்போகும் மைகார்டுகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் கூறினார்.
இவ்வாண்டு அக்டோபர்வரை 565,000-க்கும் அதிகமான மைகார்டுகள் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டிருக்கின்றன.
“மற்றவர்களுக்குச் சொந்தமான இந்த மைகார்டுகளை வெளிநாட்டவர் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியம் உள்ளதை அமைச்சு மறுப்பதற்கில்லை”.
காணாமல்போன மைகார்டுகள் வெளிநாட்டவருக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்று கூறிய அதைத் தடுக்க அரசாங்கம் “கடும்” நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இவர்களே தேர்தலின் பொது வங்காள தேசிகளுக்கு மைகார்டுகள் இலவசமாக கொடுத்து விட்டு இப்போது காணமல் போய்விட்டது என்று கதை அளக்கின்றனர் . இதை நம்ப நாமும் காதில் பூ சுத்திகொண்டு கேட்கிறோம்