‘வங்காள தேச வாக்காளர் விவகாரத்தில் தப்பான தகவல் சொல்லி நாடாளுமன்றத்தைத் திசை திருப்பியவர் நஜிப்’

anwarவங்காள தேசத்தைச் சேர்ந்த 40,000 அந்நிய தொழிலாளர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று எதிரணியினர் கூறியதாகச் சொல்லி நாடாளுமன்றத்தில் தப்பான எண்ணத்தை உருவாக்கியவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டியுள்ளார்.

எதிரணியினர் அப்படிச் சொல்லவே இல்லை என்றவர் திட்டவட்டமாகக் கூறினார்.

“வெளிநாட்டு வாக்காளர்கள் பற்றியும் அவர்கள் விமானங்களில் கொண்டுவரப்பட்டது பற்றியும் பேசி இருக்கிறோம். ஆனால், 40,000 பேரைத் தேர்தல் ஆணையம் வாக்காளர்களாக பதிவுசெய்துள்ளதாக சொன்னதில்லை.

“அம்னோ-ஆதரவு வலைத்தளங்கள்தான் அப்படி ஒரு கதையை கட்டி விட்டிருக்கின்றன”, என்றாரவர்.

நஜிப், தம் பட்ஜெட் உரையில் எதிரணியினர் அவ்வாறு குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறினார்.