மலேசியாகினி கட்டிடத்துக்கு ஒரு கல்லை வாங்கினார் மாட் சாபு

mkiniபாஸ் துணைத் தலைவர் மாட் சாபு, மலேசியாகினி, ஒரு புதிய கட்டிடம் வாங்குவதற்கு உதவியாக ஒரு கல்லை விலைக்கு வாங்கினார்.

வரும் வெள்ளிக்கிழமை பாஸ் கட்சித் தேர்தலில் தம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள போட்டியிடும் மாட் சாபு, ஊடக சுதந்திரத்துக்கு ஆதரவுதெரிவிக்கும் நோக்கில் அதைச் செய்ததாகக் கூறினார்.

“நான் ஊடகச் சுதந்திரத்தை ஆதரிக்கிறேன், பக்காத்தான் ரக்யாட் தலைவர்களும் தனிப்பட்டவர்களும் இதை ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறேன்”, என்றாரவர்.

மலேசியாகினியின்  புதிய கட்டிடம் பெட்டாலிங் ஜெயா, செக்‌ஷன் 51-இல் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ளது. அதன் விலை ரிம6.1மில்லியன். சீரமைப்புப் பணிகளுக்கான செலவையும் சேர்த்தால் ரிம7மில்லியன் ஆகும்.

கட்டிடம் வாங்குவதற்கான நிதிக்காக, மலேசியாகினி ‘ஒரு கல் வாங்குவீர்’ இயக்கத்தைத் தொடக்கியுள்ளது. ஒரு கல்லின் விலை ரிம1,000 அதை வாங்குவோர் பெயர் அதில் பொறிக்கப்படும். அவர்கள் கொடுக்கும் பணம் மலேசியாகினிக்கு வழங்கும் சந்தாதொகையாகவும் கருதப்படும். இந்த இயக்கத்தின்வழி அடுத்த இரண்டு மாதங்களில் ரிம3மில்லியன் திரட்ட மலேசியாகினி இலக்குக் கொண்டுள்ளது.