அரசியலில் ஈடுபட்ட காரணதுக்காக அரசு ஊழியர் எவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதில்லை என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 2010-க்கும் 2013-க்குமிடையில் அனுமதி பெறாமல் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டிய ஒன்பதின்பர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் இவ்வாறு கூறினார்.
அரசு ஊழியர் நடத்தைவிதிகளின்படி அரசியலில் ஈடுபட விரும்பும் அரசு ஊழியர்கள் அவர்களின் துறைத் தலைவர்களின் அனுமதி பெற வேண்டும்.
அந்த 9 பேரும் எந்தக் கட்சியை ஆதரித்து வேலை செய்து இருப்பார்கள் என ஊகிப்பது மிக சுலபம்.