பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா கடந்த நவம்பர் 10 இல் காட்டாருக்கு தனிப்பட்ட ஜெட் விமானத்தில் மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானது. அவர் நாட்டை பிரதிநிக்கவில்லை என்று அவருடன் காட்டாருக்கு சென்ற அம்னோ பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸைனால் ஓத்மான் ஒப்புக்கொண்டார்.
னால், அவர் ரோஸ்மாவுடன் அதே ஜெட் விமானத்தில் பயணித்தாரா என்பது தெளிவாக்கப்படவில்லை.
ரோஸ்மாவுக்கு விடுக்கப்பட்ட “அழைப்பு தனிப்பட்ட முறையிலானதே தவிர அரசாங்க அடிப்படையில் அல்ல” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் 2014 ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தின் போது கூறினார்.
மேலும், அப்பயணத்திற்கு ஜெட் விமானம் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கிய அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கியது துணைப் பிரதமர் முகைதின் யாசின், ரோஸ்மாவின் கணவர் நஜிப் ரசாக் அல்ல என்றும் அஸைலினா கூறினார்.
“அவர் (ரோஸ்மா) மட்டுமல்ல. மூத்த அரசாங்க அதிகாரிகள், ஊடகத்தினர் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளும் இருந்தன” என்று எவரையும் குறிப்பிடாமல் அவர் கூறினார்.
ஆனால், இதற்குமுன் நாடாளுமன்றத்தில் ரோஸ்மா அரசு ஜெட் விமானத்தைப் பயன்படுத்தியதைத் தற்காத்து பேசிய பிரதமர் துறை அமைச்சர் சகிடான் காசிம் “நாட்டு மக்களின் நன்மைக்காக அவரது (பிரதமரின்) துணைவியார் நாட்டை பிரதிநிதித்தார்”, என்றார்..
மேலும், ரோஸ்மாவின் பயணம் அதிகாரப்பூர்வமானது என்றும் காசிம் நாடாளமன்றத்தில் கூறினார்.
காசிம் நாடாளுமன்றத்தில் கூறிய அதிகாரப்பூர்வமான பயணம் இதுதான்: ரோஸ்மா அரசு ஜெட் விமானத்தில் நவம்பர் 10 இல் காட்டாரில் நடைபெற்ற 4 ஆவது காட்டார் அனைத்துலக வாணிக மகளிர் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றார்.
அக்கருத்தரங்கு தனிப்படவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
ஓர் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தவறான தகவல் அளித்துள்ளார். மக்கள் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
தனிப்பட்டப் பயணம் என்பது உரிதிஎன்றால், வானூர்தியை பயன் படுத்த அனுமதித்த துணைப் பிரதமரையும் அப்பயணத்தின் ‘கதாநாயகி’ மேலும் அதில் பயணித்த அனைவரையும், ஊடகவியலாளர்களைத்
தவிர்த்து, அப்பயணத்திற்கான லட்சக் கணக்கான செலவை
வட்டியுடன் செலுத்த தலைமைக் கணக்காய்வாளர் உத்தரவிட
வேண்டும். அவருக்கு அதிகாரம் உள்ளதா?? சந்தேகமே!!
அதல்லாம் ஒரு காரணம் காட்டி மலிப்பிவிடுவான்கள்..இவன்களுக்கு கை வந்த கலை தானே .