தமிழ்ப்பள்ளிகள் நிலைக்குமா? இன்று கருத்தரங்கு

1 blueprintமலேசிய கல்வி அமைச்சர் வெளியிட்ட மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013 – 2025 நடப்பு ஆண்டிலிருந்து அமலுக்கு வருகிறது. இப்பெரும் கல்வித் திட்டத்தின் வழி மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி வழியிலான  கற்றல் கற்பித்தலுக்கும் தேவைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தாய்மொழிப்பள்ளிகளான சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் இருக்கும். அவை எப்படி இருக்கும்? எவ்வளவு காலத்திற்கு இருக்கும்? அதன் தனித்துவம் எந்த அளவுக்கு பாதிப்படையும்? தாய்மொழிக் கல்வி உரிமையா அல்லது சலுகையா? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன.

blueprintஇக்கேள்விகளுக்கு விடை காண  ஒரு கருத்தரங்கை தமிழ் அறவாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் சீனமொழிக் கல்விக்காக போராடும் அமைப்பான டோங் ஸோங்கின் பிரதிநிதியும் கலந்துகொள்கிறார்.

தமிழ்ப்பள்ளிகளின் தரம், அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ் அறவாரியம்  அழைக்கிறது.

இக்கருத்தரங்கு குறித்த விபரம்:

நடைபெறும் இடம்: Bilik Syarahan, சிவிக் செண்டர், பெட்டாலிங் ஜெயா

நாள்:  நவம்பர் 23, 2013 (சனிக்கிழமை)

நேரம்: பிற்பகல் மணி 2.00 – 5.00

தொடர்பு: தமிழ் அறவாரியம் அலுவலகம் 03-26926533