மற்றவர்கள் எழுத்தைத் திருடினேனா? மறுக்கிறார் பேராசிரியர் டீ

riduanயுனிவர்சிடி பெர்தஹானான் நேசனல் மலேசியா (யுஎன்பிஎம்) பேராசிரியர் ரித்வான் டீ அப்துல்லா, தாம் கல்விப் பணிகளுக்கு மற்றவர்களின் எழுத்துகளைத் திருடியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். அவ்வாறு கூறுபவர்கள் தம் “பெயரைக் கெடுக்கும் எண்ணம் கொண்டவர்கள்” என்றவர் சாடினார்.

உத்துசான் மலேசியாவின் பத்தி எழுத்தாளராகவும் உள்ள ரித்வான், தம் எழுத்தைப் பிடிக்காதவர்கள்தான் அப்படிக் குறைகூறுவதாகச் சொன்னார்.

தம் கருத்துகள் பிடிக்கவில்லை என்றால் முறையான வாதங்களை  முன்வைத்து மறுக்க வேண்டும். கண்மூடித்தனமாகக் குற்றம் சாட்டக்கூடாது என்றார்.

ரித்வான் தம் ஆய்வுக்கட்டுரைகளுக்காக மற்றவர்களின் எழுத்துகளைத் திருடும் பழக்கம் உள்ளவர் என்று புகார் கொடுக்கப்பட்டிருந்தும்கூட  யுஎன்பிஎம் அவரைப் பேராசிரியராக பதவி உயர்த்தி இருப்பதாக  டிஏபி செனட்டர் அரிபின் ஒமார் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம்  கூறினார்.