டிஏபி-இல் அணிகள் உண்டு ஆனால், அவற்றால் கட்சிக்குப் பாதிப்பு இல்லை

1 dapபினாங்கு டிஏபி தலைவர்கள் இருவர், அக்கட்சியில் இரண்டு அணிகள் அமைந்து டிசம்பர்- 1  தேர்தலையொட்டிய பரப்புரைகளைச் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதை ஒட்டுமொத்தமாக மறுக்கவில்லை, அதேவேளை அதைப் பெரிதுபடுத்தவுமில்லை.

“இதெல்லாம் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். எந்தக் கட்சியிலும் அரசியலில் ஒத்த கருத்துக்கொண்டோர்  அணிசேர்வது இயல்பான ஒன்றுதான்”, எனத் துணை முதலமைச்சரும் மாநில டிஏபி  துணைத் தலைவருமான பி.இராமசாமி கூறினார்.

1 dap1ஜெலுத்தோங் எம்பி, ஜெஃப் ஊய் (வலம்), அணிகள் இருப்பதை மறுக்கவில்லை ஆனால், அவர்கள் “ஒருவர் மற்றவர் குரல்வளையைக் கடித்துக் குதறும் அளவுக்கு”க் குரோதம் கொண்டவை அல்ல என்றார்.

அப்படியே அணிகள் இருந்தாலும், தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அவை உருவாகி இருக்கலாம். தேர்தல் பரபரப்பு முடிந்ததும்  எல்லாம் ஓய்ந்து ஒன்றில் மட்டுமே- பினாங்கில் டிஏபி-யை வலுப்படுத்தி, மத்தியில் பிஎன்னை ஆட்சியிலிருந்து இறக்குவதில் மட்டுமே-  அவர்கள்  குறியாக இருப்பார்கள் என்றாரவர்.